தி. சி. கௌரி சங்கர்

இந்திய அரசியல்வாதி

தி. சி. கௌரி சங்கர் (D. C. Gowri Shankar) ஒரு இந்திய அரசியல்வாதியும் கருநாடகா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) உறுப்பினராக மதுகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து கருநாடக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

2013 சட்டமன்றத் தேர்தலில் பிறகு துமக்கூரூ ஊரக சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். பின்னர் மீண்டும் 2018 தேர்தலில் போட்டியிட்டு 5640 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஜனதா தளம் மற்றும் காங்கிரசு கூட்டணி ஆட்சியில் 6 மாதங்கள் எம்எஸ்ஐஎல் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார்.

மார்ச் 2023-ல், துமக்கூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கவுரி சங்கரைக் கருநாடக உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. நீதிபதி எஸ். சுனில் தத் யாதவ், கவுரி சங்கர் 2018-ல் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அங்கீகரிக்கப்படாத வழிகளைப் பயன்படுத்தியதாகத் தீர்ப்பளித்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. GENERAL ELECTION KARNATAKA LEGISLATIVE ASSEMBLY 2008
  2. Hazarika, Abhimanyu. "Karnataka High Court sets aside 2018 election of JDS MLA DC Gowrishankar Swamy from Tumkur". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சி._கௌரி_சங்கர்&oldid=3804986" இலிருந்து மீள்விக்கப்பட்டது