தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா

பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் வெளியிடப்பட்ட விவர நூல்

தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா என்பது இந்தியா குறித்து பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் வெளியிடப்பட்ட விவர நூல் ஆகும். இது இப்போது ஒரு வரலாற்று குறிப்புப் படைப்பாக பயன்படுகிறது. இது முதன்முதலில் 1881 இல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகங்களுக்கான திட்டத்தை சர் வில்லியம் வில்சன் ஹண்டர் 1869 இல் தொடங்கி உருவாக்கினார்.

ஆக்ஸ்போர்டின் கிளாரெண்டன் பதிப்பகம் வெளியிட்ட தி இம்பீரியல் கெஜட்டியர் ஆஃப் இந்தியா 1931 பதிப்பு நூலின் அட்டை.

1908, 1909, 1931 ஆகிய ஆண்டுகளில் இந்நூலின் "புதிய பதிப்புகள்" இந்தியாவின் புவியியல், வரலாறு, பொருளாதாரம், நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கியதாக நான்கு கலைக்களஞ்சிய தொகுதிகளாகவும், மேலும் இருபது தொகுதிகளில் அகர வரிசைப்படி இடங்களின் பெயர்களின் பட்டியல், புள்ளிவிவரங்கள் சுருக்கமான தகவல்கள் போன்வற்றைக் கொண்ட விவர நூலாக உள்ளது. ஒ்வொரு தொகுதியிலும் வரைபடங்களைக் கொண்டும் உள்ளது. புதிய பதிப்புகள் அனைத்தும் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் யபல்கலைக்கழக பதிப்பக்தால் வெளியிட்டன.

பதிப்புகள்

தொகு

தி இம்பீரியல் கெசட்டியர் ஆஃப் இந்தியாவின் முதல் பதிப்பு 1881 இல் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டது. பின்பு மேலும் விரிவாக எழுதப்பட்ட இரண்டாவது பதிப்பானது, பதினான்கு தொகுதிகளாக 1885-87 ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. 1900 ஆம் ஆண்டு சர் வில்லியம் வில்சன் ஹண்டர் இறந்த பிறகு, சர் ஹெர்பர்ட் ஹோப் ரிஸ்லி, வில்லியம் ஸ்டீவன்சன் மேயர், சர் ரிச்சர்ட் பர்ன், ஜேம்ஸ் சதர்லேண்ட் காட்டன் ஆகிய அறிஞர்களால் மேலும் விரிவுபட்த்தப்பட்டு இருபத்தி ஆறு தொகுதிகளாக தி இம்பீரியல் கெசட் ஆப் இந்தியா தொகுக்கப்பட்டது. [1]

இந்தியா பற்றிய கட்டுரைகளை திருத்தப்பட்ட வடிவமானது பதிப்புக்கு பதிப்பு, பெரிதும் விரிவடைந்து, அதுவரை தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களுடன், 1893 ஆம் ஆண்டில் தி இண்டியன் எம்பையர்: இட்ஸ் பீப்பிள், இஸ்ட்ரி அண்டு புராடக்ஸ் என்ற தலைப்பில் ஒரு தனித் தொகுதியாக உருவானது.

1869 ஆம் ஆண்டில் இதன் அசல் திட்டத்தை உருவாக்கிய ஹண்டர் என்பவரால் இவை அனைத்தும் திருத்தப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Henry Scholberg (1970). The District Gazetteers of British India: A Bibliography. Zug, Switzerland: Inter Documentation Company.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு