எல்லாக் கொடுமைகளின் வேர் இதுவா?

(தி காட் டெலூஷன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எல்லாக் கொடுமைகளின் வேர் இதுவா (தி ரூட் ஆஃப் ஆல் ஈவில்?) அல்லது கடவுள் என்னும் ஏமாற்றல் (தி காட் டெலூடன்) என்பது அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்சு அவர்களால் உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு ஆவணப் படம் ஆகும். மனித இனம் சமயத்திலும், கடவுளிலும் நம்பிக்கை வைக்காமல் இருந்தால் உலகு முன்னேற்றம் பெறும் என்ற கருத்தை இந்த ஆவணப் படம் வலியுறுத்துகிறது.

தி ரூட் ஆப் ஆல் எவில்
தயாரிப்புஆலன் கிளெமென்ட்சு
கதைரிச்சர்ட் டாக்கின்சு
நடிப்புரிச்சர்ட் டாக்கின்சு,
யூசுப் அல்-கத்தாப்,
டெட் ஆக்கர்ட்,
ரிச்சர்ட் ஆரீசு
விநியோகம்சேனல் 4
வெளியீடுசனவரி 2006
முன்னர் க்ரோவிங் அப் தி யுனிவர்சு
பின்னர்பகுத்தறிவின் எதிரிகள்

இந்தத் தலைப்பு சர்ச்சைக்கு உரியதாகும். இந்தத் தலைப்பை ரிச்சர்ட் டாக்கின்சு ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வைத்தார்கள். டாக்கின்சு, எல்லாக் கொடுமைகளுக்கும் ஒன்றே வேர் என்று சாடுவது முட்டாள்தனம் என்று கூறி உள்ளார்.