தி சபர்மதி ரிப்போர்ட் (திரைப்படம்)

(தி சாபர்மதி ரிப்போர்ட் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தி சபர்மதி ரிப்போர்ட் என்பது இந்தியாவில் இந்தி மொழியில் வெளிவந்த ஓர் திரைப்படமாகும். இத்திரைப்படமானது குசராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்[2] பாலாஜி மோசன் பிக்சர்ஸ், விகிர் பிலிம்ஸ் புரொடக்சன், விபின் அக்னிஹோத்ரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளன. தீரஜ் சர்னா படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, நடிகை ராசி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பல சிக்கல்கள் மற்றும் தாமதங்களுக்குப் பிறகு, சபர்மதி அறிக்கை 15 நவம்பர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. எதிர்மறை மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3][4][5]

தி சபர்மதி ரிப்போர்ட் (திரைப்படம்)
இயக்கம்தீராச் சர்னா[1]

பின்னணி

தொகு

27 பிப்ரவரி 2002 அன்று காலையில் கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி விரைவு வண்டியின் ஒரு பெட்டியில் சமூக விரோதிகள் தீவைத்த காரணத்தினால், அயோத்தியிலிருந்து வாரணாசி வழியாக ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த 59 பயணிகள் தீயால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வை மையமாகக் கொண்டு சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ranjan Chandel reveals the REAL reason why he quit Vikrant Massey starrer 'The Sabarmati Report'". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/ranjan-chandel-reveals-the-real-reason-why-he-quit-vikrant-massey-starrer-the-sabarmati-report/amp_articleshow/111804141.cms. 
  2. "'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படம் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து". kamadenu.in. 2024-11-18. பார்க்கப்பட்ட நாள் 2024-11-18.
  3. "Vikrant Massey's The Sabarmati Report gets new release date". Cinema Express. 19 September 2024. https://www.cinemaexpress.com/hindi/news/2024/Sep/19/vikrant-masseys-the-sabarmati-report-gets-new-release-date. 
  4. "Makers of The Sabarmati Report lock new release date: Vikrant Massey starrer to hit theaters on November 15". Bollywood Hungama. 19 September 2024. https://www.bollywoodhungama.com/news/bollywood/makers-sabarmati-report-lock-new-release-date-vikrant-massey-starrer-hit-theaters-november-15/. 
  5. "The Sabarmati Report public review: Vikrant Massey’s movie receives mixed reactions, ‘like any other propaganda movie’". Mint. Nov 16, 2024. https://www.livemint.com/news/trends/the-sabarmati-report-public-review-vikrant-masseys-movie-receives-mixed-reactions-like-any-other-propaganda-movie-11731727514015.html. 

குறிப்புகள்

தொகு