தி ஹில் ஆப் தேவி

தி ஹில் ஆப் தேவி, என்பது ஈ. எம். பாரஸ்டர் என்பவருடைய இந்தியாவைப் பற்றிய நூலாகும். இந்நூலில் அவர் இரண்டு முறை (1912 முதல் 1913 வரையிலும் மற்றும் 1921) இந்தியாவிற்கு வருகை புரிந்தது, அவர் வருகையின் போது இந்தியாவின் ஆட்சிமுறை, மக்கள் போன்றவற்றையும், அவர் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள தேவாஸ் என்னும் ஊரிலுள்ள மன்னரிடத்தில் செயலாளராக பணிபுரிந்தது உள்ளிட்டவைகளையும் விவரிக்கின்றார். இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 1953-ம் ஆண்டு வெளியானது.

முதல் பதிப்பு நூல் அட்டை

இப்புத்தகத்திற்கு இந்து சமய தெய்வமான தேவியின் பெயரை வைத்துள்ளார். இக்கதையில் விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் நடந்த ஆட்சி முறை, குறிப்பாக தேவாஸ் ராச்சியத்தின் ஆட்சிமுறையைப் பற்றி விரிவாக விவரித்துள்ளார். இப்புத்தகத்தில் தேவாஸை ஆளும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையைப் பற்றியும் அதனைச் சுற்றி அமையும் விவரங்களைப் பற்றியும் எழுதியுள்ளமையால் இப்புத்தகம் இந்திய ராஜ வாழ்க்கையைப் பற்றிய ஒரு நுண்ணறிவை அளிக்கின்றது. 1924-ம் ஆண்டு வெளியான "எ பேசேஜ் டூ இந்தியா" என்ற நாவலுடன் இப்புத்தகத்தைப் படிக்கும் போது, இந்தியாவைப் பற்றிய ஒரு முழு அனுபவம் கிடைக்கும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஹில்_ஆப்_தேவி&oldid=1386178" இலிருந்து மீள்விக்கப்பட்டது