தீக்குளிப்பு

தீக்குளிப்பு என்பது ஒரு நிகழ்வை அல்லது சூழ்நிலையை முற்றாக வெறுத்து தீயால் தற்கொலை செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடு ஆகும். இது ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவமாகவும் கொள்ளப்படுகின்றது.

பொதுவாக உண்ணாநிலை போன்று தன்னை வருத்தி ஈடுபடும் போராட்டங்கள் அறவழிப் போராட்டங்கள் என்று கருதப்பட்டாலும் தீக்குளிப்பில் இருக்கும் வன்முறையால் இது அறவழிப்போராட்டமாக கருதுவதில் கருத்து வேறுபாடு உண்டு.

இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்த தமிழ் ஆர்வலர் சின்னசாமி, இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து தீக்குளித்த முத்துக்குமார், வியட்நாம் போரின் போது தீக்குளித்த புத்த பிக்குக்கள் போன்று வரலாற்றில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு ஏதும் நிகழ்ந்தால் தீக்குளிப்போரும் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்குளிப்பு&oldid=2742394" இலிருந்து மீள்விக்கப்பட்டது