தீக் போர்
தீக் போர் (Battle of Deeg) 1804 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று நடைபெற்றது. இந்தியாவின் தற்போதைய இராசத்தான் மாநிலத்திலுள்ள பரத்புர் மாவட்டத்திலுள்ள, அப்போதைய மராட்டியப் பேரரசுக்கு உட்பட்ட தீக் நகருக்கு வெளியே இப்போர் நிகழ்ந்தது. இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் ஒரு பகுதியாக தீக் போர் கருதப்படுகிறது. ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படைத்தலைவராக இருந்த பிரேசர் இப்போரில் மராட்டியப் படையைத் தோற்கடித்தார். நடைபெற்ற தாக்குதலில் பிரேசர் தன்னளவில் மரணக் காயமுற்றார். எதிரிகளின் 160 துப்பாக்கிகளில் 87 துப்பாக்கிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஆங்கிலேய வீரர்களில் 640 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். மராட்டியர்களில் 2000 வீரர்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது [1]. ஆங்கிலேயர்களின் படைத்தலைவர் உட்பட ஏராளமான வீர்ர்கள் காயமடைந்தனர் என்பதும் ஆறுநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பதும் போரின் விளைவுகளாகக் கருதப்பட்டன. தீக் நகருக்கு அருகில் நடைபெற்ற காரணத்தால் இப்போர் தீக் போர் என்றும் அழைக்கப்படுகிறது[2].
புனைக்கதைகளில்
தொகுதீக்போர் மற்றும் முற்றுகை தொடர்பான புள்ளி விவரங்கள் சியார்சு ஆல்பிரட் எண்டியின் 1902 ஆம் ஆண்டு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. (At the Point of the Bayonet: A Tale of the Mahratta War)
மேற்கோள்கள்
தொகு- ↑ A History of the Mahrattas, by James Grant Duff, vol. 3
- ↑ Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. pp. 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
- MacFarlane, Charles. A history of British India: from the earliest English intercourse to the present time
- Duff, James Grant. A History of the Mahrattas, vol. 3, p. 290