தீத்தாரியப்பப்பிள்ளை
விஜயநகரப் பேரரசின் பிரதிநிதி
தீத்தாரியப்பப்பிள்ளை [1] என்பவர் விஜயநகரப் பேரரசின் மன்னனாக விளங்கிய அச்சுத தேவ ராயனின் பிரதிநிதியாக விளங்கித் தமிழ்நாட்டுப் பகுதிகளை ஆண்டுவந்த வெங்காள நாயக்கர் காலத்தில் ஆட்சி அலுவலராக விளங்கியவர். வீரமாலை என்னும் தமிழ்நூல் பாடியதற்காக அந்த நூலைப் பாடிய புலவர் பாண்டி கவிராசருக்கு இறையிலியாக [2] நிலம் வழங்கியவர்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். தொண்டை மண்டலத்து நரசிங்கபுரத்தில் [3] தம் அரசர் அச்சுதராயர் புண்ணியமாக லட்சுமி நரசிம்மன் கோயில் கட்டுவித்தவர்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005. p. 267.
- ↑ வரி இல்லாமல் உழுதுண்ணும் மானியமாக
- ↑ சென்னையை அடுத்துள்ள நரசிங்கபுரம் கோயில்[தொடர்பிழந்த இணைப்பு]