தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல்
தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல் (Viral hemorrhagic fever) என்பது பொதுவாக தீநுண்மங்களால் ஏற்படும், குருதிப் போக்கை உண்டாக்கக்கூடிய நோயாகும். இது ஆர்.என்.ஏ கொண்டுள்ள நால்வகை தீநுண்மக் குடும்பங்களால் ஏற்படுகின்றது: சிறுமணித் தீநுண்மம் (Arenaviridae), இழைத் தீநுண்மம் (Filoviridae), புனியாத் தீநுண்மம் (Bunyaviridae), மஞ்சட் தீநுண்மம் (Flaviviridae). அனைத்து தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சலிலும் கடும் காய்ச்சல், குருதிப்போக்கு, அதிர்ச்சி போன்ற விளைவுகளும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறப்பும் ஏற்படும். சில தீநுண்மங்களால் சிறியளவு பாதிப்பு ஏற்பட்டாலும் வேறு சில தீநுண்மங்களால் உயிராபத்து ஏற்படக்கூடிய விளைவுகள் உண்டாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A novel rhabdovirus associated with acute hemorrhagic fever in central Africa". PLOS Pathog. 8 (9): e1002924. September 2012. doi:10.1371/journal.ppat.1002924. பப்மெட்:23028323.
- ↑ "Megadrought and megadeath in 16th century Mexico". Emerging Infect. Dis. 8 (4): 360–62. April 2002. doi:10.3201/eid0804.010175. பப்மெட்:11971767.
- ↑ "500 years later, scientists discover what probably killed the Aztecs". The Guardian. Agence France-Presse. 2018-01-16. https://www.theguardian.com/world/2018/jan/16/mexico-500-years-later-scientists-discover-what-killed-the-aztecs.