தீபக் சாந்து
தீபக் சந்து (Deepak Sandhu) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக பணியாற்றினார். [1]
தீபக் சாந்து Deepak Sandhu | |
---|---|
இந்திய தலைமை தகவல் ஆணையர் | |
பதவியில் 5 செப்டம்பர் 2013 – 18 டிசம்பர் 2013 | |
முன்னையவர் | சத்யானந்தா மிசுரா |
பின்னவர் | சுசுமா சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 திசம்பர் 1948 |
தலைமைத் தகவல் ஆணையராக இருந்த சத்யானந்த மிசுராவுக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று [2] முதல் பெண் தலைமைத் தகவல் ஆணையராக பதவிக்கு வந்தார். தூபக் சாந்து 1971 ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த இந்திய தகவல் சேவை அதிகாரியாவார். [3]
தொழில்
தொகுஇந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ச்சி மத்திய தகவல் ஆணையத்தின் முதல் பெண் தலைமைத் தகவல் ஆணையராக தீபக் சாந்திற்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இப்பதவிக்கு வருவதற்கு முன்பாக இவர் முதன்மை பொது இயக்குநர் (ஊடகங்கள் மற்றும் தொடர்புகள்) , பத்திரிகை தகவல் பணியகம், இந்தியத் தொலைக்காட்சி நிறுவனம், அனைத்திந்திய வானொலி நிறுவனம் ஆகியவற்றின் செய்திப் பிரிவின் பொது இயக்குநர் போன்ற பதவிகளில் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
கேன்சு, பெர்லின், வெனிசு மற்றும் டோக்கியோவில் நடத்தப்பட்ட பன்னாட்டு திரைப்பட விழாக்கள், உருசியாவின் கெலென்ட்யிக் மற்றும் சைப்ரசில் நடந்த பயங்கரவாதம் மற்றும் மின்னணு ஊடகங்கள் பற்றிய பன்னாட்டு மாநாடு மற்றும் அட்லாண்டா, அமெரிக்கா, பீகிங் போன்ற இடங்களில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி உலகம் முழுவதும் தீபக் சாந்து விரிவாகப் பயணம் செய்துள்ளார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Central Information Commission Official Site". Govt. Of India. பார்க்கப்பட்ட நாள் 6 Sep 2013.
- ↑ PTI. "Deepak Sandhu takes oath as new Chief Information Commissioner - The Economic Times". Economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
- ↑ Pti - New Delhi (2013-08-28). "Deepak Sandhu tipped to be next CIC". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
- ↑ "Deepak Sandhu takes oath as new Chief Information Commissioner". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.