தீபக் திஜோரி

இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர்

தீபக் திஜோரி (Deepak Tijori பிறப்பு: ஆகஸ்ட் 28, 1961) ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பெரும்பானமையாக பாலிவுட் மற்றும் குஜராத்தி படங்களில் பணிபுரிகிறார். மேலும் ஆஷிகி (1990), கிலாடி (1992), ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் (1992), கபி ஆகிய படங்களில் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்தன மூலம் இவர் பரவலாக பிரபலமானவர். ஹான் கபி நா (1994), அஞ்சாம் (1994), குலாம் (1998) மற்றும் பாட்ஷா (1999). பெஹ்லா நாஷா (1993) படத்திலும் முன்னணி நடிகராகவும் நடித்தார். திஜோரி 2000 ஆம் ஆண்டில் ஊப்ஸ் எனும் திரைப்படத்தினை முதல் முறையாக இயக்கினார்.மேலும் இவர் ஃபாரெப் (2005), கமோஷ் . காஃப் கி ராத் (2005), டாம், டிக், மற்றும் ஹாரி (2006) மற்றும் பாக்ஸ் (2009) போன்றவற்றிலும் இவர் நடித்துள்ளார். திஜோரி தயாரித்த தொலைக்காட்சி குறுந் தொடர் 2001 ஆம் ஆண்டு இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகளில் சிறந்த குறுந்-தொடர் பிரிவில் வென்றது . அவர் 2016 ஆம் ஆண்டில் டோ லாஃப்ஸன் கி கஹானி திரைப்படத்தினை இயக்கினார். .

தீபக் திஜோரி
திஜோரி 2014 இல்
பிறப்பு28 ஆகத்து 1961 (1961-08-28) (அகவை 63)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சிவானி திஜோரி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

டிஜோரி தனது சொந்த ஊரான மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி கல்லூரியில் பட்டக் படிப்பைப் பயின்றார். கல்லூரியில் படித்தபோது, டிஜோரி ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார், அதில் உறுப்பினர்களான அமீர்கான், அசுதோஷ் கோவாரிகர், பரேஷ் ராவல் மற்றும் விபுல் ஷா ஆகியோர் பின்னாளில் பரவலாக அறியப்படடனர். திரைப்படத்தில் நடிக்குமாறு இவரின் நண்பர்கள் இவரை அறிவுறுத்தினர். அதில் துவக்க காலத்தில் இவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் ரெடிப் டாட் காம்கு அளித்த பேட்டியில் "மூன்று ஆண்டுகளாக, நான் அலுவலகங்களுக்கு வெளியே உட்கார்ந்து தயாரிப்பாளர்களுடன் பேசி சிறிய கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டேன். அவை மிகவும் பரிதாபகராமான நாட்களாக இருந்தது எனக் கூறினார்.[1] அவர் சினி பிளிட்ஸ் பத்திரிகையிலும் விடுதி மேலாளராகவும் பணியாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

டிஜோரியின் மனைவி சிவானி ஒரு ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.[2] திரைப்பட இயக்குநர் கபீர் சதானந்த் மற்றும் பாடகி குனிகா லால் இவருக்கு மைத்துனர்கள் ஆவர். மே 10, 2009 அன்று, டிஜோரியின் 13 வயது மகள் சில மணி நேரம் கடத்தப்பட்டார்.[3][4] அவரது சாட்சியத்தின் அடிப்படையில், ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.[5][6]

கோரேகாவ்னின் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், டிஜோரி மற்றும் அவரது குடும்பத்தினரை 2012 நவம்பரில் வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது.[7] டிஜோரி குடும்பம் 2009 முதல் அங்கு வசித்து வந்தது. அங்கு வசிப்பவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர், சரியான நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை, அலுவலக பொறுப்பாளர்களை அவமதித்தார்கள் போன்ற குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது. உறுப்பினர்களின் பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி டிஜோரிக்கு ஒரு தகவல் அனுப்பியது. அதில் அடுத்த 30 நாட்களுக்குள் அந்த குடியிருப்புகளை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டது. மேலும் அந்தத் தீர்மானம் உள்ளூர் பதிவாளருக்கும் ஓர் நகல் அனுப்பப்பட்டது.[8]

திஜோரி வாத்லால் எனும் விளம்பரப் படத்தில் நடித்தார்.[9] மிஸ் இந்தியா வேர்ல்டுவைட் 2006 நிகழ்ச்சியின்[10] நீதிபதிகளில் ஒருவராக இருந்த அவர், 2009 மிஸ் இந்தியா நிகழ்ச்சியினையும் நடத்தியுள்ளார்.[11] டெல்லி மாநகராட்சிக்கு 2002 தேர்தலின் போது, அவர் இந்திய தேசிய காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்தார்.[12]

குறிப்புகள்

தொகு
  1. Kulkarni, Ronjita (7 November 2002). "Character artiste Deepak Tijori turns filmmaker". Rediff.com இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129054121/http://www.rediff.com/movies/2002/nov/07deepak.htm. பார்த்த நாள்: 19 November 2014. 
  2. "Raipur is traditionally fashionable". The Times Group. 5 May 2013. http://timesofindia.indiatimes.com/life-style/fashion/designers/Raipur-is-traditionally-fashionable/articleshow/19881330.cms. பார்த்த நாள்: 6 December 2014. 
  3. "Filmmaker Deepak Tijori's daughter 'kidnapped', returns home". Mumbai: Living Media. 10 May 2009. http://indiatoday.intoday.in/story/Filmmaker+Deepak+Tijori's+daughter+'kidnapped',+returns+home/1/41294.html. பார்த்த நாள்: 9 November 2014. 
  4. "Police to soon nab auto driver who abducted Tijori's daughter". 12 May 2009. http://www.mid-day.com/articles/police-to-soon-nab-auto-driver-who-abducted-tijoris-daughter/45142. பார்த்த நாள்: 12 November 2014. 
  5. "24-yr-old held for harassing Deepak Tijori's daughter". Mumbai: The Times Group. 21 May 2009. http://www.mumbaimirror.com/mumbai/others/24-yr-old-held-for-harassing-Deepak-Tijoris-daughter/articleshow/15925886.cms. பார்த்த நாள்: 11 November 2014. 
  6. "Guest house manager held in Tijori's daughter abduction case". Mumbai: Diligent Media Corporation. 7 June 2009. http://www.dnaindia.com/mumbai/report-guest-house-manager-held-in-tijoris-daughter-abduction-case-1262830. பார்த்த நாள்: 9 November 2014. 
  7. "Deepak Tijori asked to vacate house". HT Media. 10 November 2012 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121111063338/http://www.hindustantimes.com/Entertainment/Tabloid/Deepak-Tijori-asked-to-vacate-house/Article1-957802.aspx. பார்த்த நாள்: 11 November 2014. 
  8. "Deepak Tijori and wife given one month to pack up". Mumbai: The Times Group. 11 November 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Deepak-Tijori-and-wife-given-one-month-to-pack-up/articleshow/17190748.cms. பார்த்த நாள்: 11 November 2014. 
  9. "Vadilal TV Commercial with Rahul Bose, Deepak Tijori, Ronit Roy, Prahlad Kakkar". CNN-IBN இம் மூலத்தில் இருந்து 10 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141210103634/http://topic.ibnlive.in.com/rahul-bose/videos/vadilal-tv-commercial-with-rahul-bose-deepak-tijori-ronit-roy-prahlad-kakkar-zOf6sNuJMVU-609.html. பார்த்த நாள்: 4 December 2014. 
  10. "Trina Chakravarty crowned Miss India 2006". The Times Group. http://timesofindia.indiatimes.com/india/Trina-Chakravarty-crowned-Miss-India-2006/articleshow/1391155.cms. பார்த்த நாள்: 4 December 2014. 
  11. "Kareena,Yana add gl[amour to Ms India Worldwide"]. CNN-IBN இம் மூலத்தில் இருந்து 4 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141204163900/http://ibnlive.in.com/news/kareenayana-add-glmour-to-ms-india-worldwide/83400-8.html. பார்த்த நாள்: 4 December 2014. 
  12. "Glamour missing from civic body elections". The Hindu Group. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/glamour-missing-from-civic-body-elections/article1822322.ece. பார்த்த நாள்: 4 December 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_திஜோரி&oldid=4162390" இலிருந்து மீள்விக்கப்பட்டது