தீபன்கர் பட்டாச்சார்யா

தீபன்கர் பட்டாச்சார்யா (Dipankar Bhattacharya பிறப்பு 1960) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய பொதுவுடமை (மார்க்சிய-லெனினியம்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். [1]

தீபன்கர் பட்டாச்சார்யா
பிறப்புதிசம்பர் 1960 (அகவை 63)
குவகாத்தி, அசாம்
தேசியம்இந்தியா
கல்விராமகிருஷ்ணா மிசன், இந்தியப் புள்ளியியல் கழகம்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

தீபன்கர் பட்டாச்சார்யா 1960 டிசம்பரில் அசாம் மாநிலம் குவகாத்தியில் பிறந்தார்.  இவரது தந்தை பைத்யநாத் பட்டாச்சார்யா இந்திய ரயில்வே ஊழியராக வேலைசெய்தார். கொல்கத்தா அருகிலுள்ள நரேந்திரபூரில் உள்ள ராமகிருஷ்ணா மிசன் பள்ளிக்கூடத்தில் படித்தார். 1984 ஆம் ஆண்டு கொல்கத்தா இந்திய புள்ளியியல் கழகத்தில் புள்ளியல் துறை இளங்கலை படிப்பை முடித்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் வேலை செய்யும் போதே தீபன்கர் பட்டாச்சார்யா அரசியல் பணிகளில் ஈடுபட்ட ஆரம்பித்தரர்.. [2] இந்திய மக்கள் முன்னணி அமைப்பில் 1982 முதல் 1994 வரை பொதுச் செயலாளராக பணியாற்றினார். [3] பின்னர் அனைத்து இந்திய மத்திய தொழிற்சங்க அவையின் பொதுச் செயலாளராக செயல்ப்டார். 1987 ஆம் ஆண்டு திசம்பர் இவர் இந்திய பொதுவுடமை (மார்க்சிய-லெனினிச) விடுதலை கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த வினோத் மிச்ராவின் மறைவுக்குப் பிறகு பட்டாச்சார்யா ஏகமனதாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Organisation". cpiml.org. Archived from the original on 2021-05-21.
  2. . 
  3. Chand, Attar (1992). President Shankar Dayal Sharma, the Scholar and the Statesman. New Delhi: Anmol Publication. பக். 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8-17041-678-7. 
  4. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபன்கர்_பட்டாச்சார்யா&oldid=3558658" இலிருந்து மீள்விக்கப்பட்டது