தீப்தி கபூர்
தீப்தி கபூர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்விகமாக கொண்ட, ஆங்கில மொழியில் புதினங்களை எழுதிவரும் நாவலாசிரியரும், பத்திரிகையாளருமாவார். தற்போது போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரத்தில் வசித்து வரும் இவர், 2015 ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். [1] ஒரு மோசமான பண்பு, என்ற அவரது முதலாவது புதினம் 2015 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒரு இளம் பெண்ணைப் பற்றியும்,அவளை உடைத்து உருமாற்றும் காதலைப் பற்றியுமான நாவல். [2]
2023 இல், தீப்தி தனது இரண்டாவது நாவலான துணைக்கான காலம் (ஏஜ் ஆஃப் வைஸ்) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இந்நாவல் வெளிவருவதற்கு முன்பதாகவே, அதன் உரிமைகளை வரப்போகும் பெரிய தொலைக்காட்சித் தொடருக்காக FX ஸ்டுடியோவிற்கு விற்றுள்ளார். [3]
தீப்தி, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின்மொராதாபாத்தில் பிறந்துள்ளார். மேலும் குடிபெயர்ந்து செல்வதற்கு முன்னால் பத்திரிகையாளராக, தில்லியிலும் யோகா பயிற்சியாளராக கோவாவில் வசித்து வந்துள்ளார்[4] [5]
தீப்தி, டேராடூனில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியான வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பள்ளிக்கல்வியையும், [6] தில்லி பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கையியல் படிப்பில் இளங்கலையும் படித்துள்ளார். அதைத் தொடர்ந்து சமூக உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Deepti Kapoor - "It's tough to be a writer if you don't have family money"". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-14. பார்க்கப்பட்ட நாள் 2023-01-16.
- ↑ Lacey, Catherine (February 13, 2015). "'A Bad Character,' by Deepti Kapoor" – via NYTimes.com.
- ↑ Garner, Dwight (January 5, 2023). "'Age of Vice': A Lush Thriller Dives Into New Delhi's Underworld" – via NYTimes.com.
- ↑ "Deepti Kapoor".
- ↑ "Why everyone's talking about Deepti Kapoor's Age of Vice". The Indian Express (in ஆங்கிலம்). 2023-01-15. பார்க்கப்பட்ட நாள் 2023-01-16.
- ↑ "Why everyone's talking about Deepti Kapoor's Age of Vice". January 15, 2023.
- ↑ "Deepti Kapoor – The Asian Writer".