தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம் (Fire engine) தீயை அணைப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஆகும். சில பிராந்தியங்களில் இதை தீ எந்திரம் என்றும் தீ சரக்குந்து என்றும் தீ பயன்பாட்டுக்கருவி என்றும் அழைக்கின்றனர். தீயணைப்பு நிலையங்கள் தீயணைக்கும் பணிகள் மட்டுமின்றி கூடுதலாக அவசரக்கால மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகவும் இவ்வாகனங்களைப் பயன்படுத்துகின்றன. தீயணைப்பு வாகனம் மற்றும் தீ சரக்குந்து என்ற சொல்லாட்சி வெவ்வேறானவை அல்ல என்றாலும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தனித்தனி வாகனங்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
தீயணைப்பு வாகனங்களில் பெரும்பாலும் ஏணிகள், மணல் வாளிகள், தீயணைப்பான்கள், மூச்சுக் கவசங்கள்,ஒலி பெருக்கிகள் முதலிய கருவிகள் இருக்கும்[1]
முக்கிய பயன்பாடுகள்
தொகுதீயணைப்பு வீரர்கள் பயணிப்பதற்கும், தீயணைக்க தேவையான நீரை எடுத்து செல்வதற்கும், தீயணைக்கும் உபகரணங்களை எடுத்துச் செல்லவும் உதவுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is a Fire Engine?". WiseGeek. பார்க்கப்பட்ட நாள் 17 March 2015.