தீரத்கர் அருவி

தீரத்கர் அருவி (Teerathgarh Falls) என்பது இந்தியாவில், சத்தீஸ்கர் மாநிலத்தில், பஸ்தர் மாவட்டத்தில் கங்கேர் காட்டி என்னுமிடத்தில் உள்ள அருவியாகும்.

தீரத்கர் அருவி
Teerathgarh Falls
Map
அமைவிடம்இந்தியா, சத்தீஸ்கர், பஸ்தர் மாவட்டம்
வகைBlock
மொத்த உயரம்91 மீட்டர்கள் (299 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை3
நீர்வழிகங்கேர் ஆறு

அருவி

தொகு

கங்கேர் ஆற்றில் உள்ள அருவி உள்ளது, இது பல அடுக்கு கொண்ட அருவியாகும். அருவி நீர் 91மீ (299 அடி) உயரத்தில் இருந்து கொட்டுகிறது. [1]

இடம்

தொகு

இது ஜெகதல்பூரின் இருந்து தென்-மேற்கில் 35 கி மீ (22 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு ஜெகதல்பூர் மற்றும் சுக்மாவை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில், தார்பாவில் இருந்து சென்றடையலாம். தீரத்கர் மற்றும் குதும்சரில் இருந்து ருவியைக் காண தார்பா சந்திப்பில் இருந்து ஜீப்பில்  சென்றடையலாம். குதும்சர் குகைகள் மற்றும் கைலாஷ் குபா போன்றவை அருகிலுள்ள காணவேண்டிய இடங்களாகும். இந்த அருவி கங்கர் காதி தேசியப் பூங்காவில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Teerathgarh Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2010-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரத்கர்_அருவி&oldid=3587230" இலிருந்து மீள்விக்கப்பட்டது