தீர்த்தம்
தெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் கோயில் குளத்து நீர், புனித ஆற்று நீர், கோயிலில் அர்ச்சகர் தரும் நீர், பால் என்பவற்றைத் தீர்த்தம் என அழைப்பர். பொதுவாக இந்து ஆலயங்களில் பூசைகளுக்குப் பின்னர் ஆலய குருக்களினால் பக்தர்களுக்கு திருநீறு, சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தப் பிரசாதங்களோடு தீர்த்தம் என அழைக்கப்படும் நீர், பால் போன்றன கொடுப்பது வழமை. பக்தர்கள் அதனைப் பக்தி சிரத்தையோடு தம் இரு கைகளாலும் ஏந்தி அருந்துவதோடு தம் தலைகளிலும் தெளித்துக் கொள்வர். அவை தம்மை தம் உடல் உள் உறுப்புகளைப் புனிதப்படுத்துகிறது என்பது அவர்களது மரபார்ந்த நம்பிக்கையாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ G.S., Rajarathnam (2019). Moorthi – Thalam – Theertham. Pustaka Digital Media.
- ↑ Connect With The Divine Vol - 5 A compilation of discourses of Sri Sakthi Amma. Sri Narayani Peedam. p. 93.
- ↑ Ramesh, M.S. (1993). 108 Vaishnavite Divya Desams volume one Divyadesams in Tondai Nadu. Tirpuati: Tirupati Tirumala Devastanams. p. 47.