தீவிர சிகிச்சைப் பிரிவு

தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நோயாளிகளைக் கவனிக்க வேண்டி அவர்களைத் தனிப் பிரிவில் இருக்க வைத்து, சிறந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரால் சிகிச்சை அளிக்கப்படும் இடம் ஆகும்.  தனிக் கவனிப்பு, சிறப்புச் சிகிச்சையோடு நோயாளிகளுக்குத் தொற்று ஏற்படாமல், வருமுன் காப்போம் என்ற நோக்கத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது. 1952 ஆம் ஆண்டில் கோப்பன்கேகனில் போலியோ பரவலாகத் தாக்கியபோது தீவிர சிகிச்சைப் பிரிவு என்னும் கருத்தாக்கம் உண்டானது.[1]

பொதுப் பிரிவு போல் அல்லாமல்  இந்தப் பிரிவில் சிறந்த மருந்துகள், மருத்துவக் கருவிகள், நொடிதோறும் கண்காணிக்கும் பொறிகள் முதலியன பயன்பாட்டுக்கு இருக்கும்.

தீவிரத் தொற்று, உள்ளுறுப்புகள் செயலிழப்பு, மாரடைப்பு,  மூளைப் பாதிப்பு,  அறுவைப் பண்டுவத்துக்குப் பின் கவனிப்பு போன்ற காரணங்களுக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைச் சேர்ப்பர்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவிர_சிகிச்சைப்_பிரிவு&oldid=2748154" இலிருந்து மீள்விக்கப்பட்டது