தீவிர வலதுசாரி அரசியல் (மேற்கு நாடுகள்)

மேற்குநாடுகளில் தீவர வலதுசாரி அரசியல் என்பது துருவ வலது சாரிக் கொள்கைகளையும், இனவாதம், குறுந்தேசியவாதம், குடிவரவாளர் எதிர்ப்பு, சர்வதிகாரம், பழமைவாதம் போன்ற கொள்கைகளையும் உள்ளடக்கிய அரசியல் ஆகும். இது பாசிசம், நாசிசம், வெள்ளையின ஆதிக்கம் ஆகியவற்றுடன் பொதுவாக தொடர்புபடுத்தப்படுவது.

இனவாதம் தொகு

தீவர வலதுசாரி அரசியலில் இனவாதம் தொடர்பாக தீவர, ஆனால் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. சில வெள்ளையினமே சிறந்தது, ஆதிக்க செய்ய வேண்டிய இனம் என்று கருதுபவர்கள். சிலர் இனத் தூய்மை வேண்டி இனங்கள் வேறு வேறு நிலப்பரப்பில் வாழ வேண்டும் என்றும், கலப்புத் திருமணம் வெள்ளை இனத்தை அழிக்கும் என்றும் கருதுபவர்கள். இவர்களில் மிதவாதிகள் தமது பண்பாட்டையே தாம் காப்பாற்ற விரும்புகிறார்கள் என்கிறார்கள். பல்லினப் பண்பாடுக் கொள்கை, பன்மொழிப் பண்பாட்டுக் கொள்கை போன்றவற்றை இவர்கள் எதிர்க்கிறார்கள். தீவரமாக கருதப்பட்ட இவர்களின் நிலைப்பாடுகள் யேர்மனி, ஐக்கிய இராச்சியம், பிரான்சு போன்ற நாடுகளில் 2009-2011 காலப் பகுதியில் கொள்கை மாற்றதில் கொண்டுவந்துள்ளன.

குடிவரவாளர்கள் தொகு

பொதுவாக தீவர வலதுசாரிகள் குடிவரவாளர்கள் வருகையை எதிர்க்கிறார்கள். குடிவரவாளர்கள் பொருளாதாரத்துக்கு தேவை என்றால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கத் தேவை இல்லை என்று வாதிடுகிறார்கள். நாட்டின் பலவேறு குறைபாடுகளுக்கு குடிவரவாளர்களே காரணம் என்று அவர்கள் மேல் பழி சுமத்துவார்கள். நாட்டு கடன், வேலையின்மை, குற்றங்கள் என பல்வேறு குற்றங்களுக்கு குடிவரவாளர்களெ காரணம் என்று பெரும்பாலும் ஆதரம் அற்ற குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். மேலும் தமது பண்பாட்டை, தேசியத்தை குடிவரவாளர்கள் அச்சுறுத்துவதாகவும் வாதிடுகிறார்கள். இவர்களின் நிலைப்பாடுகளால் குடிவரவாளர்கள் சட்டங்கள் பெரும்பாலான நாடுகளில் இறுக்கப்பட்டுள்ளன. குடிவரவாளர்கள், அகதிகள் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களில் மிகவும் தீவர நிலைப்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, அசுத்திரேலியா போன்ற நாடுகள் அல்லது அவற்றின் பெரும் பகுதிகள் வெள்ளை இன மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. கறுப்பர்கள், ஆசியர்கள் போன்ற மற்றவர்கள் எல்லோரும் வெளியேற வேண்டு என்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.

வெளி இணைப்புகள் தொகு