துகளட்டை
துகளட்டை என்பது தென்னை நார்க்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு அட்டையாகும்.இந்த நார்க்கழிவு அட்டைக்கு நீர் உறிஞ்சும் மற்றும் விரிவடையும் திறன் அதிகமாக இருக்கும்.எனவே மேசையின் மேற்பகுதி மற்றும் கட்டிடங்களின் உட்புற வேலைப்பாடுகளுக்கு துகளட்டை மிகவும் பயன்படுகிறது. நார்த்தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் தென்னை நார்க்கழிவு சுற்றுச்சூழல் மாசுபடுதலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறுவிளைவிக்கும். இதில் லிக்னோ செல்லுலோஸ் என்ற பொருள் அதிகம் உள்ளதால் இதிலிருந்து துகளட்டைத் தயாரிக்கப்படுகிறது. துகளட்டை தயாரிக்க பீனால் பார்மால்டிஹைடு (16%) அல்லர் யூரியா பார்மால்டிஹைடு (20%) பசையாகப் பயன்படுகிறது. நார்க் கழிவும் பசையும் நன்கு கலந்து விரும்பிய தடிமன் அளவிற்கு 120 செல்சியஸ் 15 முதல் 20 நிமிடத்திற்கு வெப்பத்தில் அழுத்தப்படுகிறது. உருவாக்கப்பட்ட அட்டையின் முனை மற்றும் வேண்டாத பகுதிகள் வெட்டிவிடப்பட்டு சீர் செய்யப்படுகிறது. இந்த அட்டையை மேசையின் மேல் பகுதி மற்றும் கட்டிடங்களின் உட்புற வேலைப்பாடு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாம்.[1]