துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஏற்றுநடத்தியவர்கள்

ஏற்று நடத்துபவர்களின் தேர்வு

தொகு

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் செயற்குழு போட்டிகளை நடத்திட ஈடுபாடுடைய நாடுகளின் ஏலத்தொகையினைக் கருத்தில் கொண்டு அவர்களது செயற்திறனையும் ஆய்ந்து வாக்கெடுப்பின் மூலமாக தேர்வு செய்கின்றனர். இதுவரை உலகக்கிண்ணப் போட்டிகள் நடந்த நாடுகள் அனைத்திலுமே துடுப்பாட்டம் ஓர் பரவலான விளையாட்டாகும். தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் அனைத்து நாடுகளுமே ஒருமுறையேனும் தனியாகவோ பிறநாடுகளுடன் கூட்டாகவோ போட்டிகளை ஏற்று நடத்தி உள்ளன. புவியியல் வலயங்களில் உள்ள நாடுகள் கூட்டாக இணைந்து உலகக்கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தி உள்ளன.

முதல் உலகக்கிண்ணங்களை நடத்தியவர்

தொகு

இங்கிலாந்து முதல் மூன்று போட்டிகளை ஏற்று நடத்தியது. அறிமுகப் போட்டியை ஒருங்கிணைக்கத் தேவையான நிதியை தர இசைந்தமையால் ப. து.அ இங்கிலாந்திற்கு இவ்வுரிமையைக் கொடுத்தது.[1] இந்தியா மூன்றாவது போட்டியை நடத்த விரும்பியது, இருப்பினும் பெரும்பான்மை ப. து.அ செயற்குழு உறுப்பினர்கள் சூன் மாதத்தில் இங்கிலாந்தில் நிலவும் கூடுதலான பகல் நேரத்தை கருத்தில் வைத்து ஒரேநாளில் முடிக்க முடியும் எனக்கருதி இங்கிலாந்திற்கே வழங்கினர்.[2] இங்கிலாந்திற்கு வெளியே விளையாடப்பட்ட முதல் போட்டி 1987ஆம் ஆண்டின் போட்டியாகும். இதனை இந்தியாவும் பாக்கித்தானும் இணைந்து நடத்தின. குறைந்த பகல்நேரம் நிலவியதால் ஆட்டம் 60 ஓவர்களிலிருந்து 50 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட்டது.

அலுவல்முறை சாரா சுழல் அமைப்பு

தொகு

இதன்பிறகு ஒவ்வொரு துடுப்பாட்ட வலயமும் இருபது ஆண்டுகளுக்கொருமுறை பங்குகொள்ளுமாறு ஓர் அலுவல்முறை சாரா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த அமைப்பு நடைமுறையில் செயலாக்க இயலவில்லை. ஆசிய நாடுகளின் அதிகாரம் மற்றும் பங்கால் விலக்குகள் ஏற்படுத்த வேண்டியதாயிற்று. காட்டாக, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சுழல்முறையில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து கூட்டுக்குச் செல்வதாக இருந்தது.[3][4] ஆனால் துணைக்கண்ட நாடுகள் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கூடுதல் இலாபமாக கொடுக்க இசைந்ததால் அவர்களுக்கே இவ்வுரிமையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "The History of World Cup's". cricworld.com. Archived from the original on 2007-03-13. பார்க்கப்பட்ட நாள் 2006-09-19.
  2. "The 1979 World Cup in England". cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2006-09-19.
  3. "Indian threat to Australia's cup bid". theage.com.au (Melbourne). 2005-10-11. http://www.theage.com.au/news/cricket/indian-threat-to-australias-cup-bid/2005/10/10/1128796466759.html. பார்த்த நாள்: 2006-10-27. 
  4. "Caught behind in race for Cup". smh.com.au. 2005-10-11. http://www.smh.com.au/news/cricket/caught-behind-in-race-for-cup/2005/10/10/1128796466288.html. பார்த்த நாள்: 2006-10-27. 
  5. "Promise of profit won Asia the bid - Bindra". cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2006-10-27.