துணையூக்கி

துணையூக்கி (Adjuvant) என்பது மற்ற பொருட்களின் விளைவுகளை மாற்றுகின்ற மருந்தியல் அல்லது எதிர்ப்பியல் சார்ந்தப் பொருளாகும். இது, கொடுக்கப்பட்ட எதிர்ப்பிகளுக்கு எதிரான எதிர்ப்பு விளைவுகளை அதிகப்படுத்தும் கனிம (அ) கரிம பொருளாகவோ, பெருமூலக்கூறு (அ) முழுமையான, இறந்த சில வகை பாக்டீரியச் செல்களாகவோ இருக்கும். இவை சாதாரணமாக (உட்செலுத்தும் வெளிப்பொருள்களை குறைந்த அளவில் வைத்துக்கொண்டு) தடுப்பூசிகளில் உள்ள எதிர்ப்பிகளுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உடலில் ஏற்படும் எதிர்ப்பு விளைவுகளை அதிகப்படுத்தக் கொடுக்கப்படுகிறது[1][2].

மேற்கோள்கள் தொகு

  1. "ABC News: Swine Flu Vaccine: What The Heck Is an Adjuvant, Anyway? (2009)". Abcnews.go.com. 2009-08-11. பார்க்கப்பட்ட நாள் 2013-08-03.
  2. "Definition of immunological adjuvant -- NCI Dictionary of Cancer Terms". www.cancer.gov. பார்க்கப்பட்ட நாள் 2013-08-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணையூக்கி&oldid=1474914" இலிருந்து மீள்விக்கப்பட்டது