வேந்தர் (கல்வி)

(துணைவேந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேந்தர் (Chancellor) எனப்படுபவர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் தலைமைச் செயல் ஆசிரியரைக் குறிக்கும். தலைவர் (President) அல்லது ரெக்டர் (Rector) என்ற சொற்களும் சிலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான பொதுநலவாய நாடுகளில் (இந்தியா உட்பட) இந்த சொல் வழமையாக அன்றாட அலுவல்களில் ஈடுபடாத, ஏட்டளவில் தலைமை வகிக்கும் பதவியாக உள்ளது. பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொதுத்துறைப் பல்கலைக்கழகங்களில் மாநில ஆளுனர் அல்லது குடியரசுத் தலைவர் வேந்தராக பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்குழுவின் தலைவர் இணை வேந்தர் (Pro-Chancellor) என்று அழைக்கப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவின் வேந்தருக்கு இணையாக தலைமை செயலராக பணியாற்றுபவர் இந்நாடுகளில் துணை வேந்தர் என்று அழைக்கப்படுகின்றனர். சில பொறியியல் பல்கலைக்கழகங்களில் (காட்டாக, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்) இவர்கள் இயக்குனர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

ஐரோப்பா பெருநில நாடுகளில், குறிப்பாக இசுப்பானியா, ஸ்காண்டிநேவிய நாடுகள் மற்றும் செருமனியில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் கல்வித் தலைவர் ரெக்டர் என்று வழங்கப்படுகின்றனர். சில நாடுகளில் வேந்தர் என்ற அலங்காரப்பதவி வகிப்போர் பெரும் தலைவர் (Gran Canciller) என்றும் அழைக்கப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேந்தர்_(கல்வி)&oldid=3632737" இலிருந்து மீள்விக்கப்பட்டது