துத்தநாகமெலாண்டெரைட்டு
துத்தநாகமெலாண்டெரைட்டு (Zincmelanterite) என்பது (Zn,Cu,Fe)SO4•7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். துத்தநாகம், தாமிரம், இரும்பு ஆகிய தனிமங்களின் சல்பேட்டுகளால் இக்கனிமம் ஆக்கப்பட்டுள்ளது. சிங்மெலாண்டெரைட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மென்மையான ஒற்றை சரிவச்சு கட்டமைப்பில் பசுமையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் காணப்படும் இக்கனிமம் மோவின் அளவுகோலில் 2 என்ற கடினத்தன்மை மதிப்பும் 2.02 என்ற ஒப்படர்த்தி மதிப்பையும் கொண்டுள்ளது.
துத்தநாகமெலாண்டெரைட்டு Zincmelanterite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | ZnSO4•7H2O |
இனங்காணல் | |
நிறம் | வெளிர் பச்சை-நீலம், மஞ்சள் பச்சை, ஆப்பிள்-பச்சை |
படிக அமைப்பு | [ஒற்றைச் சாய்வு |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
மேற்கோள்கள் | [1] |
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள கன்னிசன் மாகாணத்தின் வல்கேன் சுரங்க மாவட்டத்தில் 1920 ஆம் ஆண்டு துத்தநாகமெலாண்டெரைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. உள்ளடக்கத்தில் துத்தநாகத்தையும் தோற்றத்தில் மெலாண்டரைட்டு போலவும் காணப்படுவதால் துத்தநாகமெலாண்டெரைட்டு என்ற பெயர் கனிமத்திற்கு சூட்டப்பட்டது [2].