துத்தார் சுரங்கம்
துத்தார் சுரங்கம் (Duddar mine) என்பது பாக்கித்தானின் மிகப்பெரிய ஈயம் மற்றும் துத்தநாகச் சுரங்கமாகும் [1]. மேற்குப் பாக்கித்தானிலுள்ள பலூசிசுத்தான் மாகாணத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது [1]. இச்சுரங்கத்தில் 50 மில்லியன் டன்களாக இருப்பில் உள்ள தாதுவில் 3.2% ஈயமும் 7% துத்தநாகமும் உள்ளன. இருப்புள்ளதாகக் கருதப்படும் தனிமங்களின் அளவைக் கணக்கிட்டால் 1.6 மில்லியன் டன்கள் ஈயமும் 3.5 மில்லியன் டன்கள் துத்தநாகமும் இருப்பில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது [1].
அமைவிடம் | |
---|---|
பலூசிசுத்தான், பாக்கித்தான் | |
நாடு | பாக்கித்தான் |
உற்பத்தி | |
உற்பத்திகள் | ஈயம், துத்தநாகம் |
உரிமையாளர் | |
நிறுவனம் | சீன உலோகவியல் நிறுவனம் (51%) ஊனான் இரும்பல்லாத உலோகங்கள் நிறுவனம் (49%) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Mineral deposits of Pakistan" (PDF). pakboi.gov.pk. 2012. Archived from the original (PDF) on 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.