துரிடெல்லா அட்டனுட்டா

துரிடெல்லா அட்டனுட்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
குடும்பம்:
துரிடெல்லிடே
பேரினம்:
துரிடெல்லா
இனம்:
து. அட்டனுட்டா
இருசொற் பெயரீடு
துரிடெல்லா அட்டனுட்டா
ரீவே, 1849

துரிடெல்லா அட்டனுட்டா (Turritella attenuata) என்பது கடல் நத்தை சிற்றினமாகும். இது துரிடெல்லிடே குடும்பத்தில் உள்ள ஒரு கடல் வயிற்றுக்காலி மெல்லுடலி ஆகும்.[1]

விளக்கம்

தொகு

மெல்லிய நீண்ட கூம்பு வடிவ ஓட்டினை கொண்டுள்ளது. து. அகுடாங்குலாவை விட நீளமானது. சுழல்களின் நடுவில் மிகவும் மங்கலான நிறமுடையது. தையல் சுருக்கங்கள் இதன் விளைவாக ஆழமாகத் தோன்றும். மேற்பரப்பு நுண்ணிய சுழல் வரிகளையும் வலுவாக உயர்த்தப்பட்ட சுழல் முகடுகளால் கடக்கப்படுகிறது. ஆனால் முந்தைய சுழல்களின் வரிப்பள்ளங்கள் அளவில் சிறியதாக இருக்கும். சுழல் நடு பள்ளம் இல்லை. மெல்லிய வட்ட வெளிப்புற உதடு உண்டு. ஆரம்பச் சுழல்களுடன் கூடிய பழுப்பு நிற ஓடு நீலநிற-பழுப்பு நிறமுடையது.

பரவல்

தொகு

மணல் மற்றும் சேற்று அடிப் பகுதிகளில் இந்தியா[2] மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Turritella attenuata Reeve, 1849. Retrieved through: World Register of Marine Species on 17 May 2010.
  2. R. Thamizharasan. 2019. Diversity of Marine Mollousc in Vedarniyam Coast. M. Sc. Dissertation submitted to Rajah Serfoji Government College (Autonomous)(Affiliated to Bharathidasan University, Thiruchirapalli. Pp41
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரிடெல்லா_அட்டனுட்டா&oldid=3847161" இலிருந்து மீள்விக்கப்பட்டது