துருக்மெனிஸ்தானின் பெண்கள் ஒன்றியம்
துருக்மெனிஸ்தானின் பெண்கள் ஒன்றியம் (Women's Union of Turkmenistan) துருக்மெனிஸ்தானில் என்பது துருக்மெனிஸ்தானில் பெண்கள் மேம்பாட்டிற்காக செயல்படும் அமைப்பாகும். இந்நாட்டில் நீண்ட காலமாக, அனுமதிக்கப்பட்ட மகளிர் அமைப்பாக இச்சங்கம் மட்டுமே இருந்தது.[2] இந்த அமைப்பு பெண்களின் உரிமைகளுக்காக வாதிடும் அமைப்பாக, அரசு சாரா அமைப்பாகத் தோற்றுவிக்கப்பட்டது. இந்நாட்டில் மகளிர் சங்கங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிலையில் இருந்தன.[3]
Türkmenistanyň zenanlar birleşigi | |
சுருக்கம் | TZB |
---|---|
உருவாக்கம் | 7 ஏப்ரல் 1994[1] |
நிறுவனர் | அபாத் இரைசயேவா |
நோக்கம் | பெண்களின் உரிமைகள் |
சேவை | துருக்மெனிஸ்தான் |
தலைவர் | குர்பாங்குல் அத்தயேவா |
முழக்கம் | "பெண்களின் உரிமைகள் நாட்டின் கவலை" (துருக்மேனியம்: "Aýallaryň hukuklary döwletiň aladasy") |
வலைத்தளம் | zenan.gov.tm |
துர்க்மெனிஸ்தானின் முதல் குடியரசுத் தலைவரான சபர்முரத் நியாசோவ் இறக்கும் வரை, துர்க்மெனிஸ்தானின் பெண்கள் சங்கம் சபர்முரத் நியாசோவின் தாயார் குர்பன்சோல்டன் எஜேவின் செயல்பாட்டினைக் கொண்டிருந்தது. இவர் நியாசோவின் ஆட்சியின் போது துர்க்மெனிஸ்தானின் தேசிய கதாநாயகியாகக் கருதப்பட்டார். இவருடைய பெயர் தெருக்கள், வீதிகள், நகரங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சூட்டப்பட்டன (உ.ம்.: குர்பன்சோல்டன் எஜே நகரம்). அதே பெயரின் வரிசை. துர்க்மென் நாட்காட்டியில் ஏப்ரல் மாதத்தின் பெயர் இவரது நினைவாக இடப்பட்டது. பொதுவுடைமைக் கட்சி ஆளும் மாநிலங்களில் இந்த நடைமுறையை பின்பற்றப்பட்டது. தேசிய மறுமலர்ச்சிக்கான இயக்கத்தின் (கல்கினிஷ்) உறுப்பினராக உள்ள மகளிர் சங்கத்தின் செயல்பாடுகள் நியாசோவ் என்பவரால் கட்டுப்படுத்தப்பட்டது.[4][5]
மக்கள் குழு செய்லபட்டபோது, மகளிர் சங்கமும் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.[6] 2008-ல் குழு நீக்கப்பட்டதன் மூலம் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. இருப்பினும், 2013 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, இந்த அமைப்பு, மற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் போலவே (1991 முதல் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் துர்க்மெனிஸ்தானின் ஜனநாயகக் கட்சியைத் தவிர்த்து), முதன்முறையாக துர்க்மெனிஸ்தானின் மெஜ்லிஸில் நுழைந்தது (125 இல் 16 மெஜ்லிஸில் உள்ள இடங்கள்). இதன் செயல்பாடு 2018 தேர்தல் வரை இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://hrlibrary.umn.edu/russian/cedaw/Rresponse_turkmenistan2006.html Ответы на вопросы в отношении рассмотрения Национального Доклада, представленного в Комитет по ликвидации дискриминации в отношении женщин 15 мая-2 июня 2006 г., Туркменистан, CEDAW/C/TKM/Q/5/Add.1, 11 мая 2006 г.
- ↑ Nations in Transit 2007: Democratization from Central Europe to Eurasia
- ↑ TURKMENISTAN
- ↑ The State of Democratization and Human Rights in Turkmenistan...
- ↑ Oil, Transition and Security in Central Asia
- ↑ The Europa World Year: Kazakhstan - Zimbabwe, Volume 2