துருபதன் பாஞ்சால தேசத்துப் பிரஷதனின் மகன். அக்கினி கோத்திர முனிவரின் மாணாக்கன். இவரும் துரோணாச்சாரியாரும் ஒரு சாலை மாணாக்கராயிருக்கும்போது, தனக்கு நாடு கிடைத்தால் பாதி நாட்டைத் துரோணாச்சாரியாருக்குத் தருவதாக வாக்களித்தார். பின்னர் நாடு கிட்டியவுடன், அங்குவந்த துரோணரைக் கண்டுகொள்ளவில்லை. சினமுற்ற துரோணர், "என் மாணாக்கனால் உன்னை சிறுமைப்படுத்துவேன்" என சூளுறைத்தார்.துரோணர் பீஷ்மரை அணுகி கெளரவருக்கும் பாண்டவருக்கும் வில்வித்தை கற்றுத்தர அனுமதி பெற்று அருச்சுனனைச் சிறந்த வில்லாளியாக்கினார். அவனைக் கொண்டே துருபதனைக் கட்டி இழுத்துவரச் செய்தார்.மனம் நொந்த துருபதன், "துரோணரைக் கொல்ல ஒரு மகனும் திட்டத்துய்மன், அருச்சுனனுக்கு மணம் புரிந்து வைக்க ஒரு மகளையும் திரெளபதி வேண்டித் தவமியற்றி அவ்வாறே பெற்றான்.

சிகண்டி, சத்தியஜித், உத்தமௌஜஸ், யுதாமன்யு, குமாரன், சுரதன் மற்றும் துவசசேநன் ஆகியோரும் துருபதனின் மகன்களாவார்கள். அதுமட்டுமல்ல துருபதனுக்கு சுசித்திரன் என்றொரு சகோதரனும் உள்ளதாக மகாபாரதத்தில் கூறப்படுகிறது.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருபதன்&oldid=3413023" இலிருந்து மீள்விக்கப்பட்டது