துரும்பு (விளையாட்டு)
துரும்பு எனும் விளையாட்டை இதனை எல்லா வயதினரும் ஆணாலும் பெண்ணாலும் விளையாடுவர்
துரும்பு எனும் விளையாட்டை இதனை எல்லா வயதினரும் ஆணாலும் பெண்ணாலும் விளையாடுவர்.
துரும்பு என்பது புல்பூண்டுகளின் ஒரு துணுக்கு. விளையாடுவர் அருகிலுள்ள அனைவரையும் விளையாட வைத்து வேடிக்கை பார்த்து எல்லாரையும் திளைக்கச் செய்வது இந்த விளையாட்டு. விளையாடுபவர் யாருக்கும் தெரியாமல் ஒருவர் தலையில் ஒரு சிறு துரும்பை வைத்துவிட்டு
- ஒரு ஆள் தலையிலே வெள்ளாடு மேயுது
என்பார்.
எல்லாரும் அவரவர் தலையைத் தொட்டுத் தடவிப் பார்த்துத் தட்டிவிடுவர். இதனைப் பார்த்து பிறரை ஏமாற்றிவிட்டதாக மகிழ்வதும் ஒருவகைத் திளைப்பு.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல், 627 216, 1982