துர்காம் குழாய்
நுண்ணுயிரிகளால் வாயு உற்பத்தியைக் கண்டறிய துர்காம் குழாய்கள் (Durham tube)நுண்ணுயிரியல் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை வெறுமனே மற்றொரு சோதனைக் குழாயில் தலைகீழாகச் செருகப்பட்ட சிறிய சோதனைக் குழாய்களாகும். இந்த சிறிய குழாயில் ஆரம்பத்தில் நுண்ணுயிரிகளை வளர்க்க வேண்டிய உணவூட்டக் கரைசல் நிரப்பப்படும். வாயுவானது உறையிடப்பட்டு, அடைகாக்கும்போது வாயு உற்பத்தி செய்யப்பட்டால் இவை சிறிய துர்காம் குழாயில் காணப்படும். குழாய் தலைகீழாகச் செருகப்படும்போது உருவாகும் ஆரம்ப காற்று இடைவெளி கிருமியழித்தலின் போது இழக்கப்படும். கிருமியழித்தல் வழக்கமாக 121 ° செண்டிகிரேடில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் செய்யப்படுகிறது. இந்த முறையினை முதன்முதலில் 1898இல் இங்கிலாந்து நுண்ணுயிரியலாளர் ஹெர்பர்ட் துர்காம் அறிவித்தார்.[1]
பயன்பாடு | வாயு கண்டறிய |
---|---|
தொடர்புடைய கருவிகள் | சோதனைக் குழாய் |
குறிப்புகள்
தொகு
வெளி இணைப்புகள்
தொகு1. http://www.vumicro.com/vumie/help/VUMICRO/Nitrate_Broth_with_Durham_Tube.htm
2. http://www.bd.com/ds/technicalCenter/inserts/L007459(07)(0506).pdf
மேற்கோள்கள்
தொகு- Durham, Herbert E (1898). "A simple method for demonstrating the production of gas by bacteria". British Medical Journal 1: 1387. பப்மெட்:20757850.
- ↑ Durham 1898