துர்கா பூஜை

துர்கா பூஜை (Durga Puja) என்பது பராசக்தியின் வடிவாம் அன்னை துர்கையை ஆராதிக்கும் ஒரு விழாவாகும். ஆண்டுதோறும் சரத் (இலையுதிர்) காலத்தில் அசுவினி (புரட்டாசி/ஐப்பசி) மாதத்தின் சுக்லபட்ச பிரதமையில் தொடங்கி நவமி வரை அன்னை துர்கா தேவியை வழிபடுவர். இதை துர்கோத்சவம் என்றும் சரத் காலத்தில் வருவதால் சரத் உத்சவம் என்றும் அழைப்பர். துர்கா பூஜை வரும் பட்சம் தேவி பட்சம் என அழைக்கப்படும். இதற்கு முன் வரும் 15 நாட்கள் பித்ரு பட்சம் என அழைக்கப்படும். தேவி பட்சம் அசுவினி சுக்ல பிரதமையில் துவங்கி பௌர்ணமி அன்று லட்சுமி பூஜையுடன் நிறைவுறும்.

துர்கை
துர்கா பூஜை

துர்கா பூஜை, அன்னை எருமைத்தலை அரக்கனாம் மகிஷாசுரனை வென்றதற்காக கொண்டப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் அன்னையை மகிஷாசுரமர்தினியாக வணங்குவர்.[1][2][3]

துர்கா பூஜை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடபட்டாலும் மேற்கு வங்கத்தில் மிகப் பெரும் விழாவாகும். ஒடிசா, அசாம், பீகாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர். பொது இடங்களில் பந்தல் அமைத்து அன்னையை பூஜிப்பர். கர்நாடகம், தமிழ் நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களிலும் இதை கொண்டாடுவர். மேற்கு வங்கத்தில் சஷ்டி தொடங்கி தசமி வரை இதை கொண்டாடுவர்.

மற்ற பெயர்கள்

தொகு

இதை மேற்கு வங்கத்தில் அகால போதான், துர்கோட்சப், பூஜோ, பூஜை என்று அழைப்பர் .வங்க தேசத்தில் பகவதி பூஜை என்று இதை சொல்வர்.

கர்நாடகத்தில் தசரா, மராட்டியத்தில் நவதுர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரி, ஆந்திரத்தில் பொம்ம கொலுவு என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_பூஜை&oldid=4126570" இலிருந்து மீள்விக்கப்பட்டது