துர்க்வெல் ஆறு

கென்யா மற்றும் உகாண்டாவின் எல்லையில் உள்ள எல்கான் மலையிலிருந்து துர்கானா ஏரி வரை பாயும் ஆறு.

துர்க்வெல் ஆறு (Turkwel River) என்பது கென்யா மற்றும் உகாண்டாவின் எல்லையில் உள்ள எல்கான் மலையிலிருந்து துர்க்கானா ஏரி வரை பாயும் ஒரு ஆறாகும். இந்த ஆறு அது தோன்றும் இடத்திலிருந்து கென்யாவின் துர்கானா மாவட்டத்தின் எல்லை வரை சுவாம் ஆறு என்று அழைக்கப்படுகிறது. துர்க்வெல் என்ற பெயர் துர்கானா மொழியின் திர்-கோல், என்ற இரு சொற்களின் சேர்கையில் உருவானது. இதன் பொருள் "வனப்பகுதியைத் தாங்கும்" ஆறு என்பதாகும். இந்த ஆறானது எல்கான் மலை மற்றும் செரங்கனி மலைகளின் பசுமையான சரிவுகளில் தோன்றுகிறது. பின்னர் தெற்கு துர்கானா சமவெளியைக் கடந்து, லோட்வார் அருகே உள்ள லோடுரேரி பாலைவனத்தைக் கடந்து, உலகின் மிகப்பெரிய பாலைவன ஏரியான துர்கானா ஏரியில் வந்து சேருகிறது. [1] ஆற்றின் ஓட்டம் பருவகாலத்திற்கு ஏற்ப மாறுபடும், இதனால் மழைக்காலத்தில் சிலசமயங்களில் திடீர் வெள்ளமும் ஏற்படும். [1]

கென்யாவின் துர்கானா மாவட்டத்தில் உள்ள லோட்வார் நகருக்கு வெளியே, துர்க்வெல் ஆற்றின் வறண்ட ஆற்றுப்படுகை
துர்க்கானா ஏரியில் ஆறு சேருவதைக் காட்டும் படம்

சர்ச்சைக்குரிய டர்க்வெல் அணையானது கென்ய அரசால் 1986 முதல் 1991 வரை பிரான்சின் உதவியுடன் இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. துர்க்வெல் ஆற்று நீரை பயன்படுத்துவதே இதன் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு முதலில் நான்கு பில்லியன் கென்யா சில்லிங் பணம் செலவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் 20 பில்லியன் கென்யா சில்லிங்கைவிட கூடுதலாக செலவானது. இந்த அணை துர்க்வெல் பள்ளத்தாக்கை ஓரளவு நிரப்பி துர்க்வெல் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கமாக உள்ளது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Adams, W. M. (1989). "Dam construction and the degradation of floodplain forest on the Turkwel River, Kenya". Land Degradation & Development (Wiley) 1: 189–198. doi:10.1002/ldr.3400010303. 
  2. Kotut, Kiplagat; Njuguna, Stephen G; Muthuri, Francis M.; Krienitz, Lothar (1999). "The physico-chemical conditions of Turkwel Gorge Reservoir, a new man made lake in Northern Kenya". Limnologica – Ecology and Management of Inland Waters 29: 377–392. doi:10.1016/S0075-9511(99)80046-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்வெல்_ஆறு&oldid=4182990" இலிருந்து மீள்விக்கப்பட்டது