துளைப்பொன்

பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாற்று உயர்ந்த பொன்

துளைப்பொன் என்பது பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாற்று உயர்ந்த பொன்னாகும். இப்பொன் மாற்று குறையாதது என அரசு அதிகாரியால் உறுதி செய்யப்பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப்பட்டதால் 'துளைப்பொன்' என அழைக்கப்பட்டது.[1]

" ஈசான மங்கலத்துத் திருச்செந்துறை தாம் எடுப்பிச்ச திருகிகற்றளி பெருமானடிகளுக்கு சென்னடை திருவமுதுக்கு முதலாகக் குடுத்த வெடேல் விடுகு கல்லால் துளைப்பொன் அறுபதின் கழஞ்சு" [2] என்ற கல்வெட்டுப்பகுதியால் இதனை அறியலாம்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. வை. சுந்தரேச வாண்டையார். முப்பது கல்வெட்டுகள், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு நான்காம் பதிப்பு செப்டம்பர் 2009- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-004-8
  2. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி, (S.I.I., Vol.III, Part III, Ins, No 96) பக்கம் 228
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளைப்பொன்&oldid=2697365" இலிருந்து மீள்விக்கப்பட்டது