துவார்த்தே பர்போசா

துவார்தே பர்போசா (Duarte Barbosa, 1480, லிஸ்பன், போர்த்துக்கல் - 1 மே 1521, பிலிப்பைன்ஸ்) போர்த்துகல்லைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கடல்வழிப் பயணி ஆவார். கி.பி 1500 மற்றும் 1516-17 இடையே போர்த்துகீசியர் இந்தியாவில் (கேரள மாநிலத்தின் கண்ணூர்) நடத்திய தொழிற்சாலைகளில் எழுத்தராகவும், மலையாள மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தனது மைத்துனர் பெர்டினென்ட் மகெலன்]] தலைமையில் உலகைச் சுற்றிய முதல் கடல் பயணத்தில் இணைந்து கொண்டார்.

துவார்த்தே பர்போசா
பிறப்பு1480
லிஸ்பன்
இறப்பு1 மே 1521
செபு நகரம்
பணிதேடலாய்வாளர்
கையெழுத்து
Duarte Barbosa.png

அவர் கி.பி 1516-ல் எழுதிய "துவார்த்தே பர்போசாவின் நூல்"[1] (Livro De Duarte Barbosa) இந்தியப் பெருங்கடல் பயணம் குறித்த போர்த்துகீசியம் பயண இலக்கியம் நூல்களில் முன்னோடியாகும்.

கி.பி 1521-ல் பிலிப்பைன்ஸ் சென்ற பர்போசா, செபு தீவின் அரசர் ராஜா ஹுமாபான் (rajah Humabon) உடன் போர்த்துகீசியர் நடத்திய போரில் மகெலனுடன் பங்கு கொண்டார். போரில் வென்ற செபு அரசர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட பர்போசா, நஞ்சு கலந்த உணவின் மூலம் கொல்லப்பட்டார்.

உசாத்துணைதொகு

  1. "Duarte Barbosa, Mansel Longworth Dames, The Book of Duarte Barbosa: An account of the countries bordering on the Indian Ocean and their inhabitants ", Asian Educational Services, 1989, ISBN 81-206-0451-2

நூல்பட்டியல்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவார்த்தே_பர்போசா&oldid=2734062" இருந்து மீள்விக்கப்பட்டது