தூக்கத்தில் சிறுநீர் கழித்தல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழித்தல் என்பது பெற்றோர்களின் பெரும் கவலையாக இருக்கிறது. குழந்தைகளை பொருத்தவரை ஆறு முதல் எட்டு வயதுவரை இது ஒரு சாதாரண பழக்கமாகும். எட்டு வயதிற்கும் மேல் இப்பழக்கம் நீடித்தால் சர்க்கரை வியாதிக்கான பரிசோதனை அல்லது சிறுநீரக பரிசோதனை செய்வது சிறந்தது. தடுக்கும் முறைகள்: 1. குழந்தைகளை குறை சொல்லவோ, திட்டவோ செய்யாதீர்கள். 2.தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழிக்கச் செய்யுங்கள் 3. இதுஒரு சாதாரணப் பிரச்சனை என்று தாழ்வுமனப்பான்மையை அகற்றுங்கள். 4. உறிஞ்சும் தன்மையுள்ள படுக்கை விரிப்புகளை பயன்படுத்தவும். 5.இரவினில் சிறுநீர் கழிக்க வசதியாக இரவு விளக்குகளை அணைக்காமல் வைக்கவும். 6. பழக்க வழக்கங்கள் மூலம் குணப்படுத்த முடியும். 7.மருத்துவ வல்லுனரிடம் தகுந்த ஆலோசனை பெறவும். 8.இமிபிரமின் போன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உட்கொள்ளவும். 9. படுக்கை ஈரம் காட்டியை பயன்படுத்தவும். ஆதாரம் : ஹாரிஸன் டெக்ஸ்ட் புக் ஆஃ இன்டர்னல் மெடிஸன்