தூண்டல் விளைவு
வேதியியலில், தூண்டல் விளைவு (Inductive effect) என்பது மூலக்கூறொன்றில் அணுக்கள் அல்லது மூலக்கூற்றுத் தொகுதிகளுக்கு இடையில் உள்ள சகப்பிணைப்பு ஒன்றின் முனைவுறுதலில் அருகாமையில் உள்ள பிணைப்பு, அணு அல்லது தொகுதியின் காரணமாக ஏற்படும் மாற்றம் ஆகும். இது ஒரு நிலையான நிகழ்வு ஆகும்.[1] இது π பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்மங்களில் காணப்படும் எலக்ட்ரான் நகர் விளைவினைக்கு ஈடாக σ பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்மங்களில் காணப்படும் ஒரு நிகழ்வாகும்.
விளக்கம்
தொகுஈத்தேன் மற்றும் எதில் குளோரைடுகளைக் கொண்டு இந்த நிகழ்வினைப் பின்வருமாறு விளக்கலாம். ஈத்தேனில் காணப்படும் C–C பிணைப்பானது முனைவுத் தன்மை அற்றது. ஆனால், எதில் குளோரைடில் காணப்படும் C–C பிணைப்பு முனைவுத் தன்மை கொண்டது. எதில் குளோரடு சேர்மத்தில் C–Cl பிணைப்பில் கார்பன் மற்றும் குளோரின் அணுக்களுக்கு இடையில் காணப்படும் எலக்ட்ரான் கவர் தன்மையில் உள்ள வேறுபாட்டின் காரணமாக, C–Cl சகப்பிணைப்பில் உள்ள எதிர்மின்னிகள் குளோரினை நோக்கி ஒப்பீட்டளவில் ஈர்க்கப்படுகிறது. இதன் விளைவாக மேற்சொன்ன பிணைப்பில் குளோரினின் மீது சிறிதளவு எதிர்மின் தன்மையும், அதனோடு இணைந்த கார்பன் அணுவின் மீது சிறிதளவு நேர்மின் தன்மையும் ஏற்படுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக, எதில் குளோரைடு சேர்மத்தில் காணப்படும் C1 ஆனது தனக்கும் C2 விற்கும் இடையே உள்ள பிணைப்பின் எதிர்மின்னி இணையினை தன்னை நோக்கி ஈர்க்கிறது. இத்தகைய முனைவாதல் நிகழ்வே தூண்டல் விளைவாகும்.[2] இந்த விளைவானது அருகாமைப் பிணைப்புகளில் அதிகமாகவும், C1 இலிருந்து செல்லச் செல்ல குறையவும் செய்கிறது. இவ்விளைவு தூண்டல் விளைவிற்கு காரணமான தொகுதியிலிருந்து நான்கு பிணைப்புகளுக்கு அப்பால் மிகக்குறைவாகி விடுவதால் முக்கியத்துமற்றதாகி விடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Richard Daley (2005). Organic Chemistry, Party 1 of 3. Lulu.com. pp. 58–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-304-67486-9.
- ↑ [file:///home/chronos/u-775f83202eabecb57a45f21e7481dacfd4c4e282/Downloads/XI%20Std%20Chemistry%20Vol-2%20Tamil%20Medium%20Combined%2015.09.18.pdf மேல்நிலை முதலாம் ஆண்டு வேதியியல் தொகுதி 2] (PDF). தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். 2018. p. 182.
{{cite book}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு]