தூண்டாமணி விளக்கு
தூண்டாமணி விளக்கு என்பது இந்துக் கோவில்களின் கருவறையில் உள்ள ஒரு வகை விளக்காகும். இவ்விளக்கினைத் தூங்காமணி விளக்கு, நந்தா விளக்கு என்றும் அழைக்கின்றார்கள். இவ்விளக்கினை, திருநுந்தா விளக்கு என்று முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நுந்துதல் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள். இவ்விளக்கின் சிறப்பு அமைப்பின் காரணமாகத் திரியைத் தூண்டுதல் அவசியமற்று இருப்பதால் நுந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்பெறுகிறது. நுந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.[1] [2] [3]