தூண்டில்

தூண்டில் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஆகும். தற்காலத்தில் பல்வகைப்பட்ட புதுவகைத் தூண்டில்கள் பயன்பாட்டில் உள்ளன. மரபுரீதியிலான தூண்டில், தூண்டில் கோல், தூண்டில் ஊசி, இழை, மிதவை(இதை சில இடங்களில் மப்புலி என அழைப்பர்)என்பவற்றைக் கொண்டிருக்கும். தூண்டில் ஊசியில் வேறுபட்ட இரைகளை பொருத்தி அதனைக் கவரவரும் மீன் பிடிக்கப்படுகிறது.

மரபுவழி தூண்டில் மூலம் மீன்பிடித்தல், மட்டக்களப்பு
புதுவகை இயந்திரத் தூண்டில், இங்கிலாந்து கெனட் எவொன் கால்வாயில்

தூண்டில் ஊசிதொகு

 
தூண்டில் ஊசி

தூண்டில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஊசி தூண்டில் ஊசி ஆகும். இது சிறப்பான வளைவையும் கொக்கி போன்ற கூர்முனையையும் கொண்டு காணப்படும். முனைப்பகுதியில் இரை பொருத்தப்படும். முனையிலுள்ள கொக்கி தூண்டிலை சுண்டி இழுக்கும் போது மீனின் தொண்டையில் செருகிக் கொள்ளும்.

இரைதொகு

மீன்பிடித்தலில் இரு வகையான இரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை இயற்கை இரைகள், செயற்கை இரைகள் என்பவையாகும்.

இயற்கை இரைதொகு

தூண்டில் மூலம் மீன் பிடித்தலில் இயற்கை இரையாக பூச்சிக் குடம்பிகள், கீடங்கள், புழுக்கள், மண்புழு, சிறியமீன்கள், தவளைகள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை உண்மையான மணம், நிறம், தன்மை என்பவற்றைக் கொண்டிருப்பதால் செயற்கை இரையை விட செயற்றிறன் மிக்கவையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்டில்&oldid=1867818" இருந்து மீள்விக்கப்பட்டது