தூண் அன்னை (Our Lady of the Pillar (எசுப்பானியம்: Nuestra Señora del Pilar)) என்பது தூய கன்னி மரியா எசுப்பானியாவில் கிறித்தவத்தின் தொடக்க காலத்தில் சாரகோசாவில் அளித்ததாக நம்பப்படும் காட்சியின் அடிப்படையில் அவருக்கு அளிக்கப்பட்டும் பெயர்களுள் ஒன்றாகும். இப்பட்டத்தின் கீழ் கன்னிமரியா எசுப்பானியா நாட்டுக்கும், எசுப்பானியா உள்நாட்டுப் படைக்கும் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார். எப்ரோ நதிக்கரையில் அமைந்துள்ள தூண் அன்னை பசிலிக்கா இப்பக்தி முயற்சியின் முதன்மை ஆலயமாக விளங்குகின்றது.[1]

தூண் அன்னை
தூண் அன்னை
இடம்சாரகோசா, எசுப்பானியா
தேதி2 ஜனவரி 40
கத்தோலிக்க ஏற்புதிருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸ், 1456
ஆலயம்தூண் அன்னை பசிலிக்கா, சாரகோசா, எசுப்பானியா

மேற்கோள்கள்

தொகு
  1. March, J.M. (1911). "Nuestra Señora Del Pilar" from New Advent: The Catholic Encyclopedia". New York: Robert Appleton Company. Retrieved 2013-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்_அன்னை&oldid=3596529" இலிருந்து மீள்விக்கப்பட்டது