தூண் விளையாட்டு
தூண் விளையாட்டு சிறுவர் சிறுமியர் தொட்டு விளையாடும் விளையாட்டு. இதை தூண்பிடிச்சு என்றும் கூறுவர்.
தூணைத் தொட்டுக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது என வைத்துக்கொண்டு விளையாடுவர்.
நான்கு தூண்களில் நான்கு பேர் நிற்பர். அவர்களில் ஒருவர் பட்டவராகித் தொடுவார். மற்ற மூவரும் ஓடி வேறு தூணைத் தொடுவர். குறுக்கு நெடுக்குமாகவும், பக்கவாட்டிலும் ஓடுவர். ஒரு தூணை இருவர் பற்றிக்கொண்டு நிற்கக் கூடாது; நின்றால் ஒருவரைத் தொடலாம். அல்லது ஓடும்போது தொடவேண்டும். தொடப்பட்டால் தொடப்பட்டவர் பட்டவராகித் தொடவேண்டும்.
இதுதான் விளையாட்டு.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு 1954