தூயநீர்க்குடா குழிபந்தாட்டக் கூடலகம்

தூயநீர்க்குடா குழிபந்தாட்டம் மற்றும் காட்டுக் கூடலகம் (The Clearwater Bay Golf & Country Club) என்பது ஹொங்கொங், சயி குங் மாவட்டம், தூய நீர் குடா தீபகற்பத்தில் உள்ள குழிப்பந்தாட்டத் திடலும், காட்டுக் கூடலகமும் ஆகும். இது ஒரு தனியார் சொத்தாகும். இதனை நடாத்தப்படுவதும் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்த விளையாட்டு திடலுக்கு செல்வதானால் சயி குங்கில் இருந்து படகு சேவையின் ஊடாகவே செல்ல முடியும். இது வசதி மிக்கவர்களின் ஒரு விளையாட்டு திடலாக உள்ளது. முற்றிலும் மக்கள் வசிப்பிடங்கள் இல்லாத, சுற்றிலும் இயற்கை சூழ்ந்த, காண்போரைக் கொள்ளைக்கொள்ளும் அழகுமிகு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விளையாடுவதற்கு அங்கத்தினர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

தூய நீர் குடா குழிபந்தாட்டத் திடல்

அங்கத்தினர் அட்டைகளில் ஆறு வகையான அங்கத்தினர் அட்டைகள் உள்ளன. ஆகக்குறைந்த அங்கத்தினர் உரிமை HK$ 500,000 முதல் HK$ 3,500,000 வரையாகும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அங்கத்தினர் உரிமையை புதுபித்தலுக்கான மேலதிகக் கட்டணமும் அறவிடப்படுகிறது.

அங்கத்தினர் வகைகள்தொகு

  1. நிறுவனக் குழிபந்தாட்டம்
  2. தனியார் குழிபந்தாட்டம்
  3. நிறுவன வன குழிபந்தாட்டம்
  4. தனியார் வன குழிபந்தாட்டம்
  5. கடல்சார் நிறுவன அங்கத்தினர்
  6. கடல்சார் தனியார் அங்கத்தினர்

வெளியிணைப்புகள்தொகு