தூய இதயக் கல்லூரி, செண்பகனூர்


தூய இதயக் கல்லூரி, செண்பகனூர் தமிழக இயேசு சபையினரின் குரு மாணவர்கள் பயிற்சி மையம் ஆகும். இந்த மையம் தொடங்கிய காலத்தில் அதிகமாக, வெளிநாட்டு இயேசு சபையினர் பயிற்சி பெற்று வந்தனர். பிறகு இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்தவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்

தொடக்கம்

தொகு

இப்பயிற்சி மையம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து செயல்பட்டு வருகின்றது.

மையத்தின் செயல்பாடுகள்

தொகு

இம்மையம் தொடங்கப்பெற்ற காலத்தில் நவ துறவறம், இளந்துறவறம், மெய்யியல் பயிற்சித்தளங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது, இயேசு சபையின் இறுதிக்கட்ட பயிற்சிக்களமாக உள்ளது.

இங்கு, அருங்காட்சியகம், இயேசு சபையின் ஆவணக்காப்பகம், இயற்கை தாவரவியல் மையம், சிகரம் என்னும் சமூகப் பணி மையம், மகளிருக்கான கிரிகிணி பயிற்சி மையம், தியான ஆற்றுப்படுத்துதல் மையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன.