தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை

தூய சவேரியார் கல்லூரி (St. Xavier's College) தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் குருக்களால் நடத்தப்படும் தன்னாட்சிக் கல்லூரியாகும். பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுத்திடலுக்கு (High Ground) செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

தூய சவேரியார் கல்லூரி
St. Xavier's College
குறிக்கோளுரைVeritate Lumen et Vita
ஒளியும் வாழ்வும் உண்மையால்
உருவாக்கம்1923; 101 ஆண்டுகளுக்கு முன்னர் (1923)
தலைமை ஆசிரியர்அருட்தந்தை முனைவர் வி. ஹென்றி ஜெரோம். சே. ச.,
முதல்வர்முனைவர் எஸ், மரியதாசு, சே.ச.
அமைவிடம்,
தமிழ்நாடு
,
வளாகம்58 ஏக்கர்
இணையதளம்txavierstn.edu.in

வரலாறு தொகு

பெல்ஜியத்தில் பிறந்தவரும் இயேசுசபைக் குருவுமான ஆல்பர்ட் லெபியூ என்பவர் தன் சகக் குருக்களான கௌசானல், தனசாமி, ஞானப்பிரகாசம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தூய சவேரியர் கல்லூரியை 1923ஆம் ஆண்டு நிறுவினார். 1923 முதல் 1926 வரை அவரே இக்கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார்.

தன்னாட்சித் தகுதி தொகு

இக்கல்லூரி 1987ஆம் ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தானே புதிய பட்டப்படிப்புகளையும் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகளையும் உருவாக்கிக் கொள்கிறது.

தரநிலை தொகு

தேசிய தர மதிப்பீட்டுக் குழு தொகு

17-04-2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 17ஆம் நாள் தேசிய தர மதிப்பீட்டுக் குழு (Ntional Assessment and Accreditation Council -NAAC) 5 நட்சத்திரத் தகுதியை(5 STAR) வழங்கியுள்ளது. இக்குழு (NAAC) மீண்டும் 2006ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் இக்கல்லூரிக்கு A நிலை ('A' Grade) வழங்கியுள்ளது. 2012ல் மீண்டும் A தரம் பெற்ற இக்கல்லூரி அண்மையில் (2019) 4ற்கு 3.66 தரப்புள்ளிகளுடன் A தரம் பெற்று இப்பகுதியில் சிறந்த கல்லூரியாக உள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு தொகு

பல்கலைக்கழக மானியக்குழு இக்கலூரிக்கு "ஆற்றல் சார் கல்லூரி" என்னும் தகுதியினை 2004, 2010 ஆகிய ஆண்டுகளில் வழங்கியுள்ளது.

படிப்புகள் தொகு

பட்டப் படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் இளங்கலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. இளங்கலை ஆங்கிலம், இளங்கலை பொருளாதாரம், இளம்வணிகவியல் (BCom). இளம் அறிவியல் பிரிவுகள் (B. Sc) கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல்.

பட்ட மேற்படிப்புகள் தொகு

தமிழ், நாட்டார் வழக்காற்றியல், முதுகலை வணிகவியல் (M. Com). முதுகலை அறிவியல் பிரிவுகள் (M.Sc) கணிதம், தாவரவியல், விலங்கியல் ஆகிய பட்ட மேற்படிப்புகளும் உள்ளன.

ஆய்வியல் நிறைஞர் (M. Phil.) தொகு

தமிழ், கணிதம், விலங்கியல் ஆகிய துறைகளில் இளம் ஆய்வியல் படிப்புகள் உள்ளன.

முனைவர் பட்ட படிப்புகள் (Ph. D.) தொகு

தமிழ், ஆங்கிலம், நாட்டார் வழக்காற்றியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் முனைவர் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.[1]

முன்னாள் மாணவர் அமைப்பு தொகு

இக்கல்லூரி தனது பவளவிழாவை (Platinum Jubilee) 1998-99ஆம் ஆண்டுகளில் கொண்டாடியது, அதனைத் தொடர்ந்து ஏற்கெனவே இருந்த முன்னாள் மாணவர் அமைப்பினை வலுப்படுத்தியது. பல முக்கிய ஆளுமைகள் அதன் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது ஏறத்தாள 250 வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Courses". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
  2. "Lab" (PDF). Archived from the original (PDF) on 2016-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.

வெளியிணைப்புகள் தொகு