தூரம்
தூரம் என்பது இரு புள்ளிகளுக்கிடையிலான இடைவெளியைக் குறிக்கும். நடைமுறைக் கணிதப் பயன்பாட்டில் தூரம் என்பது இரு பொருட்களுக்கிடையிலான அல்லது புள்ளிகளுக்கிடையிலான பௌதீக நீளமாகும். எடுத்துக்காட்டாக இரு நாடுகளுக்கிடையிலான தூரம். யாதாயினுமொரு பயணமொன்றில் பயணப் பாதையினூடக இடம்பெற்ற மொத்த நகர்வைத் தூரம் எனக் குறிப்பிடலாம்.