தூல உடல்
தூல உடல் அல்லது பெளதீக உடல் என்று அழைக்கபடுவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகிய ஐம்பூதங்களால் ஆன பெளதீக உடல் ஆகும். இந்திய யோக சாஸ்திரங்களில் மூவுடல்கள் என அழைக்கப்படும் உடல்களில் இதுவும் ஒன்று.[1] முறையே தூல உடல், (Physical Body) , சூக்கும உடல் (Astral Body), காரண உடல் ( (Causal Body) என மூன்று வகைப்படும். இதற்கான ஆதாரங்களை திருமூலரின் திருமந்திரங்களில் பாடல் எண் 2122ல் "காயப்பை யொன்று சரக்கு பலவுள" எனத் தொடங்கும் பாடல் மூலம் அறியலாம்.[2]
தூல உடலை திருமூலர் காயப்பை என உவமைப் படுத்துகிறார். காயம் = உடல்; பை = கொள்கலம் என்ற இரு வார்த்தைகளை இணைத்து காயப்பை என கூறுகிறார்.