தெகெசுதன், ஈரான்

தெகெசுதன் (Dehestān, பாரசீக மொழி: دهستان‎) என்பது ஈரானின் ஆட்சிப்பிரிவுகளில் ஒன்றாகும். பொதுவாக இவை அனைத்தும் மக்கள் வாழிடங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இதனைத் தமிழில்,ஓரளவு பொருள் தரக்கூடிய ஊரக வட்டம் எனலாம். இது சிற்றூர் அல்லது ஊர் அல்லது ஊரகம் என அழைக்கப்படுபவைகளின் தொகுதி ஆகும். இந்த வட்டத்திற்குள், பல மக்கள் வாழிடங்கள் அடங்கியிருக்கும். குறைந்த மக்கள் தொகை வாழும் நிலப்பகுதிகளுக்கு மேலேயும், பாக்ச்சு என்ற மாவட்ட நிலப்பகுதிக்கு கீழும் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும். 2006 ஆம் ஆண்டு எடுத்தப் புள்ளிவிவரப்படி, ஈரானில் 2,400 தெகெசுதன்கள் இருந்தன.[1] [2]

ஈரானின் அரசாட்சிப் பிரிவு

சொற்தோற்றம் தொகு

இந்த சொல்லின் பிறப்பிடமாக, காசுபியன் கடலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள கோர்கான் (பாரசீக மொழி: گرگان[] (கேட்க) பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சொல்லானது, ஈரானிய புல்வெளி மக்களான இடாய் அல்லது தகே என்ற பழங்குடி மக்களிடமிருந்து பெறப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[3] செம்மொழி அரபி, பாரசீக புவியியலாளர்களால், இந்த சொல்லானாது, ஓரளவு தெளிவற்ற முறையில் வரையறுக்கப் படுகிறது. மக்தேசு (Moqaddasī) பக். 358-59 என்பதில், இச்சொல்லானது, இருபத்தி நான்கு ஊர்களைக் கொண்ட ஊர்ப் பகுதியாக விவரித்தார். ஆடோட் அல்-ஆலத்தில் (Ḥodūd al-ʿālam) பக். 60, கம்யூ. பக். 193 என்பதில், தெகெசுதன்-இ சோர்(Dehestān-e Sor) என்று அழைக்கப்பட்டது. அதாவது, இந்த இடத்தில் மீனவர்களும், பால்கன் போன்ற நீழ்வாழ் பறவைகளை வேட்டையாடும் நபர்களின் உல்லாச வாழ்விடம் என்ற பொருள் பட அழைக்கப்பட்டது.


மேற்கோள்கள் தொகு

  1. Rezvani, Babak (2014-12-19) (in en). Conflict and Peace in Central Eurasia: Towards Explanations and Understandings. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004276369. https://books.google.com/books?id=juziBQAAQBAJ&pg=PA97&lpg=PA97&q=how%20many%20dehestans%20in%20iran. 
  2. http://www.citypopulation.de/en/iran/admin/
  3. http://www.iranicaonline.org/articles/dehestan
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெகெசுதன்,_ஈரான்&oldid=2884084" இலிருந்து மீள்விக்கப்பட்டது