தெக்கன் பாட்டு

தெக்கன் பாட்டு என்பது கேரளத்துக் கலைகளில் ஒன்று. இது திருவிதாங்கூர் பகுதியில், கொல்லத்திற்கு தெற்கிலுள்ள பகுதிகளில் நிகழ்த்தப்படுவது. எனவே, தெக்கன் பாட்டு எனப் பெயர் பெற்றது. (இதைப் போன்றே, வடக்குப் பகுதிகளில் நிகழ்த்தப்படுவது வடக்கன் பாட்டும் உண்டு.)

ஐதீகம்

தொகு

கேரளத்தில் உள்ள பிரமாணி என்ற சாதிப் பிரிவினர் கூறிய கதை இது. அவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்த முன்னோர்கள் மாடன், யட்சி என்ற உருவத்தில் அலைந்து திரிகின்றன. அவற்றை அமைதிப்படுத்தி இத்தகைய பாட்டுகளை பாட வேண்டும்.

பாட்டு

தொகு

முற்கால கதை பாட்டாகப் பாடப்படும். திருவிதாங்கூர் அரசராயியிருந்த குலசேகரனின் அமைச்சர் இரவிக்குட்டிப்பிள்ளை. இவர் கணியாங்குளம் போருக்கு போனது முதல் இறந்தது வரையிலான நிகழ்ச்சிகள் இந்த பாடல்களில் விவரிக்கப்படும்.

பாண்டிய வம்ச அரசனான குலசேகரன் நடத்திய போர் பற்றியும் பாடல்களில் விவரிக்கப்படும். காஞ்சிபுரத்திற்கு வடக்கில் உள்ள பகுதிகளை ஆண்டவன் வடுகராஜா. குலசேகரன் போரில் இறந்தவுடன், அவரைக் காதலித்த வடுகராஜனின் மகள் அவனை எரித்த சிதையில் விழுந்து இறக்கிறாள்.

இவற்றைப் போல், இன்னும் சில கதைகள் பாடல்களாகப் பாடுவர். இந்த தொகுப்பினையே தெக்கன் பாட்டுகள் என்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெக்கன்_பாட்டு&oldid=1805165" இலிருந்து மீள்விக்கப்பட்டது