தென்காரையூர் சர்க்கரை
தென்காரையூர் சர்க்கரை சிறந்த கொடை வள்ளல். இவரைப்பற்றிக் கொங்கு மண்டல சதகம் குறிப்பிடுகிறது.[1]
சவுக்கடி
தொகுசொட்டை என்பது இரண்டு பக்கமும் கூர்மை உள்ள ஒருவகை வேல். இந்தப் படைக்கருவியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர் தென்காரையூர் சர்க்கரை. இவரை நாடி நாவலர் ஒருவர் வந்தார். சர்க்கரையார் அவருக்குப் பொன் தட்டில் பரிசுகளை வைத்துத் தந்தார். வந்தவர் அதனை வாங்கிக்கொள்ளவில்லை. மாறாக, அருகில் கிடந்த சாட்டை ஒன்றை எடுத்து, சர்க்கரையாரை அடித்தார். சர்க்கரையார் சவுக்கடியை வாங்கிக்கொண்டே, “நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ஏன் என்னை அடிக்கிறீர்” என வினவினார். “தங்களிடம் என் நா வளத்தை வெளிப்படுத்தலாம் என்று வந்தேன். நீங்களோ எனக்குப் பரிசு தந்து என்னைக் கேவலப்படுத்திவிட்டீர். அதனால் அடித்தேன்” என்றார் நாவலர். “உண்மைதான். நான் ஒரு பணிக்காக அவசரமாக வெளியில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். உங்களைக் காக்க வைக்கக் கூடாது என்று இப்படிச் செய்தேன்” என்றார், சர்க்கரையார். நாவலர் தன் செயலுக்கு நாணி, சர்க்கரையாரைப் போற்றிப் பாடினார். இந்தச் செய்தியைக் கூறும் கொங்குமண்டல சதகம் பாடல் [2] சவுக்கால் அடித்த நாவலர் பாடிய பாடல்கள் [3]
மேற்கோள்
தொகு- ↑ கொங்கு மண்டல சதகம் பாடல் 53, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை, சாரதா பதிப்பகம் 2008, பக்கம் 73, 74
- ↑
மீறும் உலகில் எட்டுத்திக்கும் சொட்டையில் வெல்ல வல்லோன்
கூறும் தென் காரையில் சர்க்கரை வேந்தன் கொழும் தமிழால்
பேறும் புகழும் பெறவேண்டி நாவலன் பெற்ற கையான்
மாறும் சவுக்கடி பெற்றதும் கொங்கு மண்டலமே. 53 - ↑
கண்டால் புலவரை மேனாம்பு பேசும் கசடரிடம்
மிட்டா நல் உத்தமக் காமிண்டனே வித்துவான்களுக்குத்
தொண்டா புலவர் சவுக்கடி ஏற்ற சுமுக கொடைத்
தண் தாமரைக் கையும் தண்டா நல்லதம்பி சர்க்கரையே. (பழம்பாடல்)
கற்றாய்ந்த நாவலர் தன் கையிற் சவுக்கடியும்
பெற்றான் சயத்தம்பம் பேருலகில் நாட்டுவித்தோன் (நல்லதம்ப சர்க்கரை காதல் என்னும் நூல்)