தென்கொரியப் பண்பாடு

நிகழ்காலத் தென்கொரியப் பண்பாடு (culture of South Korea) என்பது மரபான கொரிய நாடோடி இனக்குழுக்களில் நிலவிய மரபுவழிக் கொரியப் பண்பாட்டில் இருந்து உருவாகி வளர்ந்ததாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக சீனத் தாக்கம் பெற்றிருந்த தென்கொரியா 1948 கொரியப் பிரிவினைக்குப் பிறகு வட கொரியாவில் இருந்து பிளவுபட்டு தனது தனித்த பண்பாட்டுத் தடவழியைப் பின்பற்றலானது. தென்கொரியாவின், குறிப்பாக, சீயோலின் தொழில்மயமாக்கமும் நகரமயமாக்கமும், கொரியர்களின் வாழ்வில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தின. மாறிவரும் தென்கொரியாவின் பொருள் வளமும் வாழ்க்கை முறைமையும் பெரிய நகரங்களில் மக்கள்தொகைப் பெருக்கத்தையும் ஊரகங்களில் மக்கள்தொகை வீழ்ச்சியையும் ஏற்படுத்தின. கூட்டுக் குடும்ப வாழ்முறை தகர்ந்து தனிக்கருக் குடும்ப வாழ்முறை உருவாகியது .

இலக்கியம் தொகு

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு கொரிய இலக்கியம் சீனச் செவ்வியல் இலக்கியத் தாக்கமுற்றதாக இருந்தது. சீன எழுத்து வடிவமும் ஆயிரம் ஆண்டுகளாக பரவலாகக் கொரியர்களால் பயன்படுத்தப் பட்டது. புத்தியல் இலக்கியம் ஆங்குல் மொழி வளர்ச்சியோடு பின்னிப்பிணைந்த தாகும். இம்மொழி மேல்தட்டு மக்களிடம் இருந்து கல்வி எளிய மக்களிடமும் பெண்களிடமும் பரவிட வழிவகுத்தது. ஆங்குல் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் கொரிய இலக்கியத்தில் ஓங்கலான நிலை அடைந்த்து. இதனால் கொரிய இலக்கியம் வேகமாக வளரலானது. சின்சோசியோல் என்பன ஆங்குல் மொழியில் எழுதப்பட்ட புதினங்கள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கொரியப்_பண்பாடு&oldid=2142955" இலிருந்து மீள்விக்கப்பட்டது