தென்கோ நடவடிக்கை
தென்கோ நடவடிக்கை (Kyūjitai: 天號作戰, Shinjitai: 天号作戦 தென்கோ சகுசென்) என்றழைக்கப்பட்ட தென் இச்சி கோ (கருத்து:விண்ணகம் நடவடிக்கை ஒன்று) இரண்டாம் உலகப் போரின் போது யப்பானியப் பேரரசால் முன்னெடுக்கப்பட்ட இறுதியான பெரும் கடல் நடவடிக்கையாகும்.[1][2][3]
தென்கோ நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
2ஆம் உலகப்போர் (பசிபிக் போரின்) பகுதி | |||||||
யமாத்தோ போர்க்கப்பல் தாக்குதலில் தீப்பற்றி எரிகிறது. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா | யப்பான் இராச்சியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
மார்க் A. மிட்ச்சர் | செயிச்சி இதோ † கெயிசோ கொமுரா |
||||||
பலம் | |||||||
11 விமானாத்தாங்கிகள் 386 விமானங்கள் | 1 போர்க்கப்பல் 1 light cruiser 8 அழிப்புக் கப்பல்கள் |
||||||
இழப்புகள் | |||||||
10 விமானங்கள் அழிவு 12 பலி | 1 போர்க்கப்பல் மூழ்கடிப்பு 1 light cruiser மூழ்கடிக்கப்பு 4 அழிப்புக் கப்பல்கள் மூழ்கடிக்கப்ப 3,700 பலி |
1945 ஏப்ரல் மாதம் அப்போது உலகின் பெரிய போர்க்கப்பலான யப்பானிய யமாத்தோ போர்க்கப்பலும் மேலும் 9 போர்க் கப்பல்களும் ஒகினவா சண்டையில் ஈடுப்பட்டிருந்த நேச நாட்டுப்படைகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் அங்கு அனுப்பப் பட்டிருந்தன. எனினும் இக்கப்பல் தொகுதி ஒகினவாவை அடையும் முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட விமானங்களால் யப்பானிய கப்பல் தொகுதி தாக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டு அண்ணளவாக முற்றாக அழிக்கப்பட்டது. யமத்தோவும் மேலும் 5 கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன.
இச்சண்டை பசிபிக் அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் வானாதிக்கத்தையும் வான் பாதுகாப்பற்ற போர்க்கப்பப்பல்களின் நிலையையும் எடுத்துக்காட்டியது. நேசப்படைகளின் யப்பான் மண் ஆக்கிரமிப்பை மந்தப்படுத்துவதற்கு பலனற்ற தாக்குதல்களில் பாரிய அளவு யப்பானியர்களை பலிகொடுக்க தயாராக இருப்பதையும் எடுத்துக் காட்டுயது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Okinawa Campaign: April 1-June 21, 1945 / Operation Ten-Go". www.history.navy.mil (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-23.
- ↑ "Operation Ten-Go: April 15-16,1945". www.history.navy.mil (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-23.
- ↑ "The Superbattleship Yamato in Operation Ten-ichi-go". www.warfarehistorynetwork.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-23.