தென்னமரவடி கிராம அலுவலர் பிரிவு
அறிமுகம்
தொகு31 E இலக்கம் உடைய தென்னமரவடி கிராம அலுவலர் பிரிவு (Thennamaravady) குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும்.
தென்னவன்மரவடி வரலாறு
தொகுபாண்டிய மன்னனுடைய மரக்கலங்கள் வந்து கிழக்கு கரையில் கட்டப்பட்ட இடம் தென்னவன் மரவடி என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் தென்னமரவடி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. குமுழமுனை பிரதேசத்தில் கட்டப்படும் யானைகள் செம்மலை குடாவின் ஊடாகவும், தென்னமரவடி ஊடாகவும் தென்னிந்தியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
தென்னமரவடியில் ஒரு புராதன இராஜதானி இருந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான வைத்தியர்கள், பிராமணர்கள் மற்றும் பல குலத்தவர்கள் இங்கு குடியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுடைய பரம்பரையினர் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் முள்ளியவளை, கணுக்கேணி, குமுழமுனை ஆகிய இடங்களில் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குமுழமுனைக்கு அடுத்திருக்கும் கரடிப்பூவல் என்ற கிராமத்தில் இருந்த வைத்திய பரம்பரையினர் தஞ்சாவுர், மற்றும் வேதாரணியம் ஆகிய இடங்களில் இருந்து வந்து குடியேறியதாக பரம்பரைக் குறிப்புக்கள் கூறுகின்றன.[1]
உசாத்துணைகள்
தொகு- திருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலை அரச அலுவலகம் (கச்சேரி) 2006. (ஆங்கில மொழியில்)
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு கிராம அலுவலர் பிரிவுகள் |
---|
இக்பால் நகர் | இரணைக்கேணி | இறக்கண்டி | கள்ளம்பத்தை | காசிம்நகர் | கட்டுக்குளம் | குச்சவெளி | கும்புறுப்பிட்டி மேற்கு | கும்புறுப்பிட்டி கிழக்கு | கும்புறுப்பிட்டி வடக்கு | கோபாலபுரம் | செந்தூர் | திரியாய் | தென்னமரவடி | நிலாவெளி | புல்மோட்டை - 1 | புல்மோட்டை - 2 | புல்மோட்டை - 3 | புல்மோட்டை - 4 | பெரியகுளம் | வாழையூத்து | வீரஞ்சோலை | வேலூர் | ஜெயாநகர் |
- ↑ சிலம்போசை-2015